கிலீவ்லாண்டிலும் டிரம்புக்கு எதிர்ப்பு

வா‌ஷிங்டன்: அதிபர் தேர்தலில் வேட்பாளராகத் தேர்வு பெறுவதற் காக தீவிரப்பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் டோனல்ட் டிரம்புக்கு எதி ராக கிலீவ்லாண்டிலும் ஆர்ப்பாட் டங்கள் நடந்துள்ளன. அவரது பிரசாரக் கூட்டத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப் புகள் கிளம்பியுள்ளன. முதலில் டிரம்பை அவரது ஆதரவாளர்கள் பலத்த கரகோஷங்களுடன் வரவேற்றனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் டிரம்பின் பிரசார வாசகங்களை கையில் ஏந்தியிருந்தனர். 'கடுமையான குடிநுழைவு', 'வர்த்தகம்', 'ராணுவத்தைச் சீரமைத்தல்' போன்ற வாசகங்கள் டிரம்பின் ஆதரவாளர்களிடையே காணப்பட்டன.

"நாம் ஒஹையோவில் வெற்றி பெறுவோமா' என்று டிரம்ப் கேட்க, கூட்டத்தினர் காதைக் கிழிக்கும் வகையில் உரத்த குரலுடன் ஆம் என்று ஆமோதித்தனர். குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டிலும் ஒஹை யோவில் வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பு இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது. டிரம்ப் மேடை ஏறிய சில நிமிடங்களில் கூட்டத்திலிருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பியது. 'டம்ப் டிரம்ப்' என்ற ஆங்கில வாசகத்தை எதிர்ப்பாளர் ஒருவர் கையில் ஏந்தியிருந்ததால் கூட்டத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. 'எங்கிருந்து இவர்கள் வரு கிறார்கள்,' என்று டிரம்ப் சிந்தனையில் மூழ்க, பாதுகாவலர்கள் சிலர் எதிர்ப்பாளர்களை வெளியேற்றினர்.

இதற்கிடையே எதிர்ப்பாளர் ஒருவருக்கும் ஆதரவாளர் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இவர்கள் பெர்னி ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் இடித்துரைத்தார். ஜனநாயகக் கட்சியில் ஹில்லரி கிளிண்டனுக்குப் போட்டியாக இருப்பவர் பெர்னி சாண்டர்ஸ். கடல் அலைபோல காணப்பட்ட டிரம்புக்கு ஆதரவான வாசகங்களுக்கு இடையே பெர்னிக்கு ஆதரவாக கையால் எழுதப்பட்ட வாசகத்தை இளம்பெண் ஒருவர் கையில் பிடித்திருந்தார். இவரும் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் எதிர்ப்பாளர்களை நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட டிரம்ப் பின்னர் எரிச்சல் அடைந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!