கோஸ்டா: நான் கடிக்கவில்லை

லிவர்பூல்: அண்மையில் சாம்பி யன்ஸ் கிண்ணப் போட்டியி லிருந்து வெளியேறிய செல்சி குழுவிற்கு ஏமாற்றம் தொடர்கிறது. இங்கிலாந்து காற்பந்து லீக்கின் முன்னணி குழுக்களில் ஒன்றான செல்சி, எவர்ட்டன் குழுவிடம் தோற்று எஃப்ஏ கிண்ண கால் இறுதிச் சுற்றிலேயே போட்டியை விட்டு வெளியேறியுள்ளது. நேற்று அதிகாலை இங்கிலாந் தின் லிவர்பூலில் உள்ள எவர்ட்டன் குழுவின் சொந்த அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி தோல்வி அடைந்தது ஒரு பக்கம் இருக்க செல்சியின் நட்சத்திர ஆட்டக்காரர் டீகோ கோஸ்டா, எவர்ட்டன் ஆட்டக்காரர் கேரத் பேரியின் கழுத்தைக் கடித்தார் எனும் சர்ச்சை அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி யுள்ளது.

ஆட்டத்தின் 77ஆவது நிமிடத் தில் செல்சியின் முன்னாள் ஆட்டக்காரரான 22 வயது ரொமெலு லுகாக்கு அடித்த அபாரமான கோல் எவர்ட்டனுக்கு 1-0 எனும் கோல் முன்னிலையைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ஐந்து நிமிடங்களில் ஏன் இந்த ஆட்டக் காரரை தங்கள் குழுவிலிருந்து விடுவித்தோம் என செல்சி ரசிகர்களையும் நிர்வாகத்தையும் தலையைச் சொரிய வைத்தார் லுகாக்கு. ஆட்டத்தின் இரண்டா வது கோலையும் அவரே போட்டு செல்சியின் எஃப் ஏ கிண்ண கனவில் மண்ணைக் கொட்டினார்.

தோல்வியைத் தழுவப் போகி றோம் என்ற எரிச்சலோ என்னவோ ஆட்டத்தின் 84ஆம் நிமிடத்தில் எவர்ட்டனின் பேரியுடன் மோதினார் செல்சியின் கோஸ்டா. ஏற்கெனவே இவ்விரு ஆட்டக்காரர் களுக்கும் இடையே ஆட்டம் முழுவதும் இழுபறி நிலவ, கோபத்தில் கோஸ்டா பேரியின் கழுத்தைக் கடிப்பது போன்று தெரிந்தது. தப்பாட்டம் காரணமாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு கோஸ்டா ஆட்டத்தை விட்டே வெளியேற எவர்ட்டன் 2=0 என்ற கோல் எண்ணிக்கையில் ஆட்டத்தை வெற்றி பெற்றது. எனினும் தாம் பேரியைக் கடிக்கவில்லை என்று பின்னர் செய்தியாளர்களிடம் கோஸ்டா கூறியுள்ளார்.

ஆட்டத்தின்போது பேரியின் கழுத்தை கோஸ்டா (உள்படம்) கடிப்பது போன்று தோன்றும் சம்பவம். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!