இங்கிலிஷ் லீக் : சிட்டி சமநிலை, முன்னேறுவதில் சரிவு

நார்விச்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் மான்செஸ்டர் சிட்டியின் கனவில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பட்டியலின் இறுதி முனையில் இருக்கும் நார்விச் குழுவிடம் சமநிலை கண்டது சிட்டி. நார்விச்சின் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நார்விச் குழுவால் கோல் ஏதும் போட முடியவில்லை என்றாலும் மறு முனையில் சிட்டியையும் கோல் ஏதும் போடவிடாமல் தனது கோல் எல்லையைக் காத்தது நார்விச். இறுதியில் ஆட்டம் 0=0 என்று கோல் இல்லாமல் சமநிலையில் முடிந்தது.

இந்த முடிவு நார்விச் குழுவிற்குச் சாதகமாக அமைந்தாலும் லீக் பட்டியலில் ஆர்சனலை முந்தி மூன்றாம் இடத்தைப் பிடிக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்த சிட்டி ஏமாற்றம் அடைந்தது. தற்போது 51 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கும் சிட்டி 60 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் லெஸ்டர் குழுவைப் பிடிப்பது எட்டாத கனியாகிக் கொண்டிருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!