காம்பிர்: கிண்ணத்தை வெல்வதிலேயே கவனம் தேவை, பாகிஸ்தான் மீது அல்ல

கோல்கத்தா: இந்திய ஊடகங்கள் அனைத்தும் நேற்று பலத்த பாதுகாப்புடன் கோல்கத்தா சென்றடைந்த பாகிஸ்தான் அணியில் கவனம் செலுத்தி வரும் வேளையில் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்வதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என கௌதம் காம்பிர் கூறியுள்ளார். இந்திய அணியுடன் 2007, 2011ஆம் ஆண்டு உலக டி20 கிண்ணத்தை வென்ற காம்பிர் கோல்கத்தாவில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார். "உலகக் கிண்ணப் போட்டி கணிக்க முடியாத ஒன்று. பாகிஸ்தான் பற்றிய செய்திகள் எல்லாம் ஊடகங்கள் தங்களது பார்வையாளர் தரவரிசையை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இந்தியா பாகிஸ்தான் போட்டியும் மற்ற போட்டிகள் போலத்தான்.

"பாகிஸ்தானுடனான ஆட்டம் தான் மிக முக்கியமானது என்றில்லை. போட்டியில் கலந்து கொள்ளும் எந்த வீரரைக் கேட்டாலும் இதுதான் இலக்கு என்று எண்ணமாட்டார்கள். உலகக் கிண்ணமே பெரிய இலக்கு. "மக்கள் இந்திய அணிக்குத் தங்களது ஆதரவைத் தருவது எதிர்பார்க்கப்படும் ஒன்று, அது இயற்கை. மக்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்துப் பார்ப்பதே முக்கியம்," என்றார் காம்பிர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!