போலியோ தடுப்பு நிலையத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் 15 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி நிலையத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவெட்டா நகரில் அரசாங்கம் நடத்தி வரும் போலியோ தடுப்பூசி மருந்தகத்திற்கு அருகே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக போலிசார் கூறினர்.

குண்டு வெடிப்பில் உயிரிழந்த வர்களில் பெரும்பாலானோர் அந்த மருந்தகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலி சாரும் சுகாதாரப் பணியாளர் களும் ஆவர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர் களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனைத் தகவல்கள் கூறின.

சிறுவர்களுக்கு போலியோ தடுப்பூசி போடப்படுவதற்கு போராளிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறுவர்களுக்கு இத்தகைய தடுப்பூசி போடுவது மேற்கத்திய நாடுகளின் சதிவேலை என்று போராளிகள் கூறி வருகின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டுமே போலியோ நோய் இன்னும் பரவி வருகிறது. பாகிஸ்தானில் மட்டும் 2014ஆம் ஆண்டு 306 பேர் போலியோ நோயால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!