வீட்டுப்பாடம் செய்யாததால் வினோதமான தண்டனை

­­­­­­­­­மும்பை: மும்பை­­­யில் வீட்­­­டுப்­­­பா­­­டம் எழுதாத இரண்டு மாண­­­வர்­­­களை நிர்­­­வா­­­ண­­­மாக்கி தண்டனை அளித்த இரண்டு ஆசி­­­ரி­­­யர்­­­கள் மீது போலிசார் வழக்­­­குப்­­­ப­­­திவு செய்­­­துள்­­­ள­­­னர். கடந்த சில நாட்­­­க­­­ளாக வகுப்­­­பறை­­க்கு வெளியே இரண்டு மாண­­­வர்­­­கள் நிர்­­­வா­­­ண­­­மாக நிற்பது போன்ற காணொளி ஒன்று இணை­யத்­தில் பரவியது. ஒரு சிறுவன் நிர்­­­வா­­­ண­­­ நிலை­­­யி­­­லும் மற்றொரு சிறுவன் சட்டை மட்டும் அணிந்த நிலையில் அரை நிர்­­­வா­­­ண­­­மாகவும் நின்று கொண்­­­டி­­­ருப்­­­பதை அந்தக் காணொளி காட்டியது.

அதோடு, இந்த மாண­­­வர்­­­கள் வெளியே நின்றுகொண்­­­டி­­­ருக்­­­கும்போது, மேலும் சில சிறுவர்கள் அறையின் உள்ளே செல்­­­வ­­­து, பின்னர் வெளியே வருவது போன்ற காட்­­­சி­­­களும் இடம் பெற்றிருந்தன. அந்தக் காணொ­­­ளி­­­க்­­­குச் சமூக ஆர்­­­வ­­­லர்­­­கள் கண்ட­­­னம் தெரி­­­வித்­­­த­­­னர். இது தொடர்­­­பாக தனியார் சமூக சேவை அமைப்பு ஒன்று போலிஸ் அதி­­­கா­­­ரி­­­களுக்­­­குத் தகவல் அளித்­­­த­­­து. இது பற்றி விசாரணை மேற்கொள்ளுமாறு மால்வாணி போலிசாருக்கு உத்தரவிடப் பட்டது. போலிசார் மேற்­­­கொண்ட விசா­­­ரணை­­­யில், இந்த சம்ப­­­வம் மும்பை மலாடு மேற்கு மால்வாணி பகு­­­தி­­­யில் இயங்கிவரும் தனியார் துணைப்­பாடப் பயிற்சி மையத்­தில் நிகழ்ந்தது தெரி­­­ய­­­ வந்தது. உட­­­ன­­­டி­­­யாக, சம்பந்தப்­­­பட்ட பயிற்சி வகுப்­­­புக்­­­குச் சென்ற போலி­சார் அங்கு விசாரணை நடத்­­­தி­­­னர். அதில், வீட்டுப் பாடத்தை எழு­­­தா­­­த­­­தால் இரண்டு சிறு­­­வர்­­­களை­­­யும் தண்­­­டிக்­­­கும் வகையில் ஆசி­­­ரி­­­யர்­­­கள் கணேஷ்­­­ நா­­­யர், சரோஜ் ஜெய்ஸ்­­­வாஸ் ஆகியோர், அவர்­­­களை வகுப்­­­பின் வெளியே நிர்­­­வா­­­ண­­­மாக நிற்­­­க வைத்­­­தது உறு­­­தி­­­யா­­­னது.

இதை­­­ய­­­டுத்து அந்த இரண்டு ஆசி­­­ரி­­­யர்­­­கள் மீதும் போலிசார் வழக்­­­குப் பதிவு செய்­­­த­­­னர். இந்த சம்ப­வம் பற்றி பெற்றோர் அறிந்­தி­ருந்­தும் புகார் ஏதும் செய்­யா­தது குறிப்­பி­டத்­தக்­கது. மாணவர்கள் வெளியில் நிற்கும்போது அவ்வழியாகச் சென்ற ஒருவர் காணொளியை இணையத்தில் பதிவேற்றியதும் அறியப்பட்டது.

இணையத்தில் உலாவந்த காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!