தமிழிசை: எத்தகைய தேர்தல் கூட்டணியும் சாத்தியம்

திருச்சி: பாஜக நினைத்தால் எத்தகைய கூட்டணியையும் அமைக்கமுடியும் என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந் தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாகக் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட 3,000 பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாகக் குறிப் பிட்ட அவர், வேட்பாளர்களுக் கான நேர்காணல் திட்டமிட்டபடி நடந்துள்ளதாகக் கூறினார். "தற்போது மத்தியில் பாஜக அரசு உள்ளது. எனவே நாங்கள் நினைத்தால் எப்படி வேண்டுமானா லும் கூட்டணி அமைக்க முடியும்.

ஆனால், எங்கள் நோக்கம் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்து தேர்த லில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான். அதன்பிறகே முதல்வர் யாரென்பதை அறிவிக்க வேண்டுமென விரும்புகிறோம். "தமிழகத்தில் எங்களுக்கு 19.5 விழுக்காடு வாக்கு வங்கி உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் மற்ற கட்சிகளுடன் இணைந்து தேர் தலைச் சந்திப்போம்," என்றார் தமிழிசை. இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்த முடிவை உடனடியாக எடுத்துவிட இயலாது என்றார். "அதிமுக, திமுக, காங்கிரஸ் என எல்லா கட்சிகளும் தனித்துப் போட்டியிடத் தயார் என்று அறிவித்தால் பாஜகவும் தயார். இது கூட்டணிக்கான காலம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!