அங் மோ கியோ கொலை வழக்கு: ஆடவருக்கு 114 மாதச் சிறை

அங் மோ கியோவில் வீவக வீடு ஒன்றில் கடந்த 2014 நவம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமையன்று 32 வயது வியட்னாமிய மாது ஒருவர் கொல்லப்பட்டார். அது தொடர்பாக 41 வயது ஆடவர் ஜேக்சன் லிம் ஹோவ் பெங் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றம் அவருக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படித் தண்டனையும் அளித்துத் தீர்ப்பளித்தது. போதை மருந்து உட்கொண்ட தனது காதலியின் அளவுக்கு மீறிய செயலைக் கட்டுப்படுத்தி அவரை அமைதிப்படுத்தும் முயற்சியாக போர்வையால் அவரது முகத்தையும் வாயையும் மூடியதாகக் கூறினார்.

தனது காதலி அளவுக்கு மீறி சத்தம்போடுவதால் அக்கம்பக்கத்தினர் போலிசில் புகார் செய்யக்கூடும் என்ற எண்ணத்திலேயே தாம் அவ்வாறு செய்ததாக லிம் நீதிமன்- றத்தில் கூறினார். தோழிக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக நாலரை ஆண்டுகள், இந்தக் குற்றத்திற்காக குறைந்தபட்ச தண்டனையான 5 ஆண்டுகளுமாக சேர்த்து மொத்தம் ஒன்பதரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் புழங்கிய குற்றத்திற்காக 3 பிரம்படிகள் விதிக்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!