தோற்றுவிப்பாளர்களுக்கு நினைவிடம் அமைக்க இரு இடங்கள் பரிந்துரை

சிங்கப்­பூ­ரின் தோற்­று­விப்­பா­ளர்­களைக் கௌர­விக்­கும் வகை­யில் அவர்­களுக்கு நினை­வுச் சின்­னங்களை நிறு­வு­வ­தற்கு ஃபோர்ட் கேனிங் பூங்கா, கார்­டன்ஸ் பை த பே ஆகிய இரண்டு இடங்களை 'தோற்­று­விப்­பா­ளர்­களைக் கொண்டா­டும் குழு' அடை­யா­ளம் கண்­டுள்­ளது. கடந்த நான்கு மாதங்களாக நடந்த பலதரப்பட்ட கலந்தாய்வுக் குப் பின் இதனை அக்­கு­ழு­வின் தலை­வர் திரு லீ சு யாங் அறி­வித்­தார். இந்த இடங்களில் நினை­வுச் சின்ன கட்­ட­டங்கள் எழுப்­பு­வது நாட்­டின் மையப்­ப­கு­தி­யில் இருப்­ப­தோடு வருங்கா­லச் சந்த­தி­யி­னரைக் கவ­ரும் வித­மா­க­வும் இருக்­கும்.

நினை­வுச் சின்னம் அமைப்­ப­தன் நோக்கம் நமது தேசிய பற்­று­தி­யில் உள்ள பண்­பு­களை­யும் இலட்­சி­யங்களை­யும் குறிப்­ப­தா­க­வும் இருக்­க­லாம் என்றார் திரு லீ சு யாங். இதன் தொடர்­பில் நடை­பெற்­றி­ருக்கும் பல்­வேறு கலந்­துரை­யா­டல்களின் மூலம் நாம் தற்­கால, வருங்கா­லத் தலை­முறை சிங்கப்­பூ­ரர்­களை ஊக்­கு­விக்­கும் வண்ணம் பல தரப்­பட்ட எண்­ணங்களைப் பெற­லாம். "இந்த நினை­வுச் சின்­னங்கள் பொது­மக்­கள் செல்­லக்­கூ­டி­ய­தா­க ­வும் தனிப்­பட்ட முறை­யி­லும் குழு­வா­க­வும் பலர் அங்கு கூடும் வகை­யி­லும் அமை­யக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்­டும்," என்றார். இதன் தொடர்­பில் தற்­போ­துள்ள அருங்காட்­சி­ய­கங்கள், முக்­ கிய நினை­வுச்­சின்­னங்கள் ஆகி­ய­வற்றை படிப்­பினை­யா­கக் கொண்டு சிங்கப்­பூ­ரர்­களின் வாழ்க்கை அனு­ப­வத்தைப் புத்­து­யி­ரூட்­டும் வண்ணம் அமைக்க வேண்­டும்," என்றார் திரு லீ.

ஃபோர்ட் கேனிங் பூங்கா (மேல் படம்:), 'கார்டன்ஸ் பை த பே'யில் உள்ள பே ஈஸ்ட் கார்டன் ஆகிய இரு இடங்களே சிங்கப்பூர் தோற்று விப்பாளர்களைக் கௌரவிக்கும் விதமாக நினைவுச் சின்னம் எழுப்ப ஏற்ற இடம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!