ஐவரி கோஸ்ட் கடற்கரையில் 16 பேர் சுட்டுக்கொலை

சிட்னி: ஆஸ்திரேலிய செய்தியாளர் கள் இருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து ஆஸ்திரேலியா மிகுந்த கவலை கொள்வதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித் துள்ளார். ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்தின் (ஏபிசி) செய்தியாளர் களான லிண்டன் பெசர், லூய் எரோக்லு ஆகிய இருவரும் கூச்சிங்கில் சனிக்கிழமை மலேசியப் போலிசாரால் கைது செய்யப்பட்டனர். மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், ஒரு பள்ளிவாசலுக்கு வந்திருந்த போது அவர் மீது கூறப்படும் புகார்கள் குறித்த விசாரணை பற்றி அவ்விரு ஆஸ்திரேலியர்களும் கேள்வி கேட்பதற்காக பிரதமரை நெருங்கியபோது அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

போலிசாரின் உத்தரவை அவ்விருவரும் பின்பற்றத் தவறிய தால் அவர்கள் கைது செய்யப் பட்டதாக மலேசியப் போலிசார் கூறினர். இந்நிலையில் அவ்விரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களும் கூச்சிங்கில் கைதானது குறித்து மலேசிய அதிகாரிகளுடன் தாங்கள் பேச்சு நடத்தவிருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!