தப்பியது மேன்யூ, விழுந்தது ஆர்சனல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கைப் போலவே இந்தப் பருவ எஃப்ஏ கிண்ணமும் முன்னணிக் காற்பந்துக் குழுக்களுக்குச் சாதக மாக அமையவில்லை. கடந்த இரு பருவங்களைப் போல இம்முறையும் கிண்ணம் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கலாம் என்ற கனவிலிருந்த ஆர்சனலுக்கு எமனாக அமைந்தது வாட்ஃபர்ட். நேற்று முன்தினம் நடந்த காலிறுதி ஆட்டத்தில் 50வது, 63வது நிமிடங்களில் கோலடித்து வெற்றியை நோக்கிச் சென்றது வாட்ஃபர்ட். 83வது நிமிடத்தில் கோலடித்து அந்த முன்னிலையைக் குறைத்தபோதும் ஆட்டத்தின் இறுதித் தருணத்தில் கிடைத்த அற்புதமான கோல் வாய்ப்பைக் கோட்டைவிட்டு ஆர்சனலின் கன வையும் சிதறடித்தார் டேனி வெல் பெக். இதனால், 2=1 என்ற கோல் கணக்கில் வெற்றியைச் சுவைத்த வாட்ஃபர்ட் அரையிறுதிக்கு முன் னேறியது.

அதே நாளில் நடந்த மற்றொரு காலிறுதியில் மான்செஸ்டர் யுனை டெட் குழுவைத் தோல்வியிலிருந்து காத்தார் இளம் பிரெஞ்சு ஆட்டக் காரர் ஆன்டனி மார்‌ஷியல். முற்பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தபோதும் 68வது நிமிடத்தில் டிமிட்ரி பாயெட் புகுத்திய கோலால் முன்னிலைக்குச் சென்றது வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழு. ஆனாலும் அடுத்த கால் மணி நேரத்தில் மார்‌ஷியல் போட்ட பதில் கோலால் ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் திரண்டிருந்த மேன்யூ ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆட்டம் 1=1 என்று சமனில் முடிய, இவ்விரு குழுக்களும் மீண்டும் ஒரு முறை காலிறுதியில் மோதுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!