லெஸ்டரை நெருங்கும் ஸ்பர்ஸ்

பர்மிங்ஹம்: நடப்பு இங்கிலிஷ் லீக் காற்பந்துப் பருவத்தில் யாரும் எதிர்பார்க்காத இரு குழுக்களுக்கு இடையே பட்டத்தை வெல்லக் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு காலத்தில் முதல்நிலை லீக்கில் நிரந்தர இடம்பிடிக்கவே தடுமாறி வந்த லெஸ்டர் சிட்டி குழு, இந்தப் பருவத்தில் கிளா டியோ ரனியெரியின் திறமையான நிர்வாகத்தாலும் ஜேமி வார்டி, மாரெஸ் போன்ற வீரர்களின் சிறப் பான செயல்பாடுகளாலும் முன் னணிக் குழுக்களுக்கு அதிர்ச்சி அளித்து பட்டியலின் உச்சத்தில் இருந்து வருகிறது.

அதேபோல, கிட்டத்தட்ட எல்லா பருவங்களிலும் 5வது, 6வது நிலையுடன் முடிக்கும் டோட்டன் ஹம் ஹாட்ஸ்பர் குழு 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?' எனும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இவ்விரு குழுக்களில் ஒன்றுக் குத்தான் இபிஎல் கிண்ணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், லெஸ்டருக்குக் கடும் சவாலாக விளங்கி வருகிறது ஸ்பர்ஸ். நேற்று முன்தினம் நள்ளிரவு வில்லா பார்க் விளையாட்டரங்கில் தொடங்கிய ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் ஹேரி கேன் மூன்று நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் புகுத்த, ஆஸ்டன் வில்லாவை அதன் சொந்த மண் ணிலேயே 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஸ்பர்ஸ்.

ஹேரி கேனின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது என்று மெச்சினார் ஸ்பர்ஸ் நிர்வாகி பொச்செட்டினோ. நடப்பு லீக்கில் இதுவரை 19 கோல்களை அடித்துள்ளார் கேன். இதற்கு முன் ஆடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி கிட்டாத நிலையில் வில்லாவிற்கு எதிரான வெற்றி ஸ்பர்ஸ் வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது. இந்த ஆட்டத்தில் கிடைத்த மூன்று புள்ளிகளுடன் இப்போது 58 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது ஸ்பர்ஸ். முதலிடத்தில் இருக்கும் லெஸ்டர் குழு 60 புள்ளிகளைப் பெற்றுள் ளது. இன்று அதிகாலை நியூகாசல் யுனைடெட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் லெஸ்டர் வென்றிருக் கும் பட்சத்தில் இந்த இடைவெளி ஐந்து புள்ளிகளாக கூடியிருக்கும்.

ஆஸ்டன் வில்லா ஆட்டக்காரர் ஆலன் ஹட்டனின் (கீழே விழுந்திருப்பவர்) தற்காப்பை முறியடித்து டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் குழுவின் முதல் கோலை அடிக்கிறார் இளம் இங்கிலாந்து வீரர் ஹேரி கேன். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!