தன்‌ஷிகா: எனது ஆன்மிக குரு ரஜினி

ஆன்மிகத்தில் ரஜினி சார் எனக்கு குரு மாதிரி என்கிறார் 'கபாலி'யில் நடிக்கும் நடிகை தன்‌ஷிகா. இந்தப் படத்தில் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இதுவரை படம் குறித்த எந்தத் தகவலையும் வெளியே கசிய விடாத படக்குழுவினர், இப்போது வெளிப்படையாக பல தகவல் களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் தன்‌ஷிகாவும், இப்படத்தில் நடிக்கும்போது ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். "படப்பிடிப்பின்போது பல சமயங்களில் ரஜினி சாருடன் ஆன்மிகம் பற்றி நிறைய பேசுவேன். அவருக்கு ஆன்மிகத்தில் அதிகப்படியான தெளிவும் அனுபவமும் ஞானமும் உள்ளது. "எனக்கும் எப்போதும் ஆன்மிக ஈடுபாடு உண்டு. ஆனால் நல்ல வழிகாட்டி இருந்ததில்லை. அந்தக் குறை இப்போதுதான் தீர்ந்தது. "ஆன்மிக விஷயங்களில் எனக்குள்ள சந்தேகங்களை ரஜினி சார் தீர்த்து வைக்கிறார்.

இனி எனது ஆன்மிக குரு அவர்தான். அவருடன் நடித்த நாட்களை என்னால் மறக் கவே இயலாது. அவ்வ ளவு பெரிய நடிகர், எவ் வளவு சாதாரணமாக, சகஜமாகப் பேசிப் பழ குகிறார் தெரியுமா?" என்கிறார் இளம் நாயகி தன்‌ஷிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!