2020க்குள் 20,000 குழந்தைப் பராமரிப்பு இடங்கள்

சிங்கப்பூரில் வேலை செய்யும் குடும்பங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தனது குழந் தைப் பராமரிப்புக் கட்டமைப்பை மேலும் வளர்க்கவிருப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' நிறுவனம் அறிவித்து உள்ளது. தற்போது 13,000 ஆக உள்ள அதன் குழந்தைப் பராமரிப்பு இடங் கள் வரும் 2020ஆம் ஆண்டுக் குள் 20,000 இடங்களுக்கு உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. இது, அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் சுமார் 50 விழுக்காடு வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக் கது.

2009ஆம் ஆண்டில் 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' நிறுவனம் தொடங்கியபோது அதனிடம் 39 குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் இருந்தன. இன்று அந்த எண் ணிக்கை 129க்கு உயர்ந்துள்ளது. மேலும் 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' நிறுவனம் அதன் திட்டங்களின் தரத்தையும் அவ்வப்போது மேம் படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது அதன் பாலர் பள்ளி களில் 90க்கு 'ஸ்பார்க்' எனும் சிங்கப்பூர் பாலர் பள்ளி அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொங்கோல் வாட்டர்வே பாயிண்டில் நேற்று 'மை ஃர்பஸ்ட் ஸ்கூல்' நிறுவனத்தின் மற்றொரு நிலையத்தைத் தொடங்கி வைத்த என்டியுசியின் தலைமைச் செயலாளர் திரு சான் சுன் சிங்,

"அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர் அக்கம்பக்கத்திலும் கட்டுப்படியா கக்கூடிய, தரமான குழந்தைப் பராமரிப்புச் சேவைகளை வழங்கு வதே 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' நிறுவனத்தின் இலக்கு," என்றார். "மேலும் எப்படிப்பட்ட குடும்ப வருமானம் அல்லது குடும்பப் பின் னணி உள்ள குடும்பத்திலிருந்து வரும் பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தைப் பெற வாய்ப்பு கொடுப்பதே எங்கள் நோக்கம். "சிங்கப்பூரில் வேலை செய்யும் குடும்பங்களுக்கு என்டியுசி அளிக்கும் ஆதரவுகளில் இதுவும் ஒன்று," என்று குறிப்பிட்டார் பிரதமர் அலுவலக அமைச்சருமான திரு சான்.

பொங்கோல் வாட்டர்வே பாயிண்டில் 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' நிலையத்தை நேற்று தொடங்கி வைத்தார் என்டியுசி தலைமைச் செயலாளர் திரு சான் சுன் சிங். படம்: என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!