ரஷ்யத் துருப்புகள் சிரியாவிலிருந்து மீட்பு

மாஸ்கோ: சிரி­யா­வில் இருந்து ரஷ்ய படை­களைத் திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் புட்டின் அந்­நாட்­டுப் பாது­காப்பு அமைச்­ச­கத்­திற்கு உத்­த­ர­விட்­டுள்­ளார். ஐந்தாண்டு உள்­நாட்­டுப்­ போ­ருக்­குத் தீர்வு கொண்டு வர ஜெனி­வா­வில் இரண்டாம் நாளாக பேச்­சு­வார்த்தை நடந்து வரும் வேளையில் சிரியா அர­சாங்கத்­திற்கு நெருக்­க­டியை ஏற்­படுத்தி பேச்­சு­வார்த்தைக்கு வழி­வி­டும் என்று இந்த முடிவை மேற்­கத்­திய நாடுகள் வர­வேற்­றுள்­ளன. இந்நிலையில், சிரியாவில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை ஐநா பின்னர் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆசாத்துக்கும் புட்டினுக்கும் கருத்துவேறுபாடு என்று உலவிய ஊகங்களை புட்டின் அலுவலகம் மறுத்தது. ரஷ்யாவின் முடிவுக்கு சிரியா இசைந்ததை அடுத்து துருப்புகளை மீட்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ரஷ்யா தெரித்தது. எத்தனை விமானங் கள், துருப்புகள் முதலில் மீட்கப் படும் என்றோ ராணுவத்தை முழுமையாக மீட்க எத்தனை காலம் எடுக்கும் என்றோ ரஷ்யா தெரிவிக்கவில்லை. சிரி­யா­வின் தற்­போதைய அதிபர் பசார் அல் ஆசாத்­துக்கு எதிராக கடந்த மூன்றாண்­டு­களுக்­கும் மேலாக நடந்து வரும் உள்­நாட்­டுப் போரில் சன்னி, ‌ஷியா முஸ்­லிம்­களுக்கு இடையே நீண்ட காலமாகப் பகை நீடித்து வரு­கிறது. ஆசாத் ‌ஷியா பிரிவைச் சேர்ந்த­வர். அவ­ருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கர­வா­தி­­கள், அல்=கொய்தா ஆத­ர­வுத் பயங்கர­வா­தக் குழுக்­கள் போரிட்டு வந்தன.

ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின் (நடு) நேற்று முன்தினம் கிரெம்ளினில் ரஷ்ய தற்காப்பு அமைச்சர் செர்கி ஷோய்கு (வலது), வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோ (இடது) ஆகியோரைச் சந்தித்து சிரியாவிலிருந்து துருப்புகளை மீட்பது குறித்து உரையாடினார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!