கடைசிக்கட்ட நியூகாசல் கோல்; யுனைடெட் ஏமாற்றம்

நியூகாசல்: ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது நியூகாசலின் பால் டும்மட் போட்ட கோல் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் வெற்றிக் கனவைக் கலைத்தது. இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் மாறிமாறி கோல் போட்ட விறுவிறுப்பான ஆட்டம் இறுதியில் 3=3 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு சொந்த அரங்கில் விளை யாடிய நியூகாசல் அதன் இரண்டு புதிய ஆட்டக்காரர்களான ஜோன் ஜோ ஷெல்வேயையும் ஹென்ரி சைவட்டையும் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதனைத் தொடர்ந்து அண்மையில் மாரடைப்பால் மரணம் அடைந்த முன்னாள் நியூகாசல் கோல்காப்பாளர் பெவல் ஸ்ரீனிசெக்குக்கு அஞ்சலி செலுத் தப்பட்டது.

ஆட்டம் தொடங்கியதும் மான்செஸ்டர் யுனைடெட் ஆதிக் கம் செலுத்த தொடங்கியது. ஒன்பதாவது நிமிடத்தில் நியூகாசல் குழுவின் ஆட்டக்காரர் சொந்த பெனால்டி எல்லையில் பந்தைக் கையால் தடுத்ததால் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டி வாய்ப்பைப் பயன் படுத்தி யுனைடெட்டின் முதல் கோலை போட்டார் நட்சத்திர வீரர் வெயின் ரூனி.

அதனைத் தொடர்ந்து 38வது நிமிடத்தில் நியூகாசல் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பந்தை சக ஆட்டக்காரரான லிங்காட்டின் கால்களுக்கு அனுப்பினார் ரூனி. லிங்காட் அனுப்பிய பந்து நியூகாசல் கோல்காப்பாளரின் கால்களுக்கு இடையே புகுந்து வலையைத் தொட்டது. 2-0 என்று முன்னிலை வகித்த யுனைடெட் வெற்றியை நோக்கி வீரநடை போட்டுக் கொண்டிருந்தது.

ஆட்டம் முடியும் தறுவாயில் நியூகாசலின் பால் டும்மட் (இடது) அனுப்பிய பந்து புயல் வேகத்தில் சீறிப் பாய்ந்து வலைக்குள் புகுந்தது. நியூகாசலின் இந்த மூன்றாவது கோல் ஆட்டத்தை சமநிலையில் முடிய வைத்தது. வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!