விதவிதமான கதைகளில் நடிக்க விரும்பும் சில நடிகர்களில் விஜய் சேதுபதி முக்கியமானவர். அதற்காகவே நேரம் ஒதுக்கி பல கதைகளைக் கேட்கிறார். அண்மையில் இவரும் 'காக்கா முட்டை' மணிகண்டனும் வியந்து கேட்ட கதை தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அந்த நல்ல கதையை எழுதியவர் டி.அருள்செழியன். இவர் விகடன் பத்திரிகைக் குழுமத்தில் பல்லாண்டுகளாக பணியாற்றி வந்தவர். அதன் பிறகு தொலைக்காட்சி ஊடகத்திலும் தன் திறமையை நிரூபித்தவர். இவரது கதையைக் கேட்ட மாத்திரத்தில் வியந்து உடனடியாக படமாக்க கிளம்பிவிட்டார்கள் மணிகண்டனும் விஜய் சேதுபதியும்.
"கதையை மட்டும்தானே கொடுக்கிறீர்கள்? அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளுங் கள். படத்தின் தலைப்பில் உங்கள் பெயர் வராது," என்று சொல்கிற அபாயகரமான சூழலும் இங்கு பல கதையாசிரியர்களுக்கு நேரும். அந்த அபாயத்தையும் இவர்கள் அருள்செழியனுக்குத் தரவில்லை என்பதுதான் முக்கியத் தகவல். முதல் பத்திரிகை குறிப்பிலேயே கதையை எழுதியவர் டி.அருள் செழியன் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு முக்கியமான விஷயம். இவ்வளவு அற்புதமான கதையைச் சொல்ல அருள்செழியன் பார்க்க முயற்சிக்காத கதாநாயகர்களே இல்லை, பார்க்காத மேலாளர்களும் இல்லை. விளைவு, அதிர்ஷ்டம் இப்போது விஜய் சேதுபதி பக்கம்.
'காதலும் கடந்து போகும்' படத்தில் விஜய் சேதுபதி, மடோனா.