எல்டிஏ: புதிய தலைவராக ஆலன் சான் நியமனம்

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆலன் சான் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்து வரும் திரு மைக்கல் லிம் சூ சேனின் பதவிக்காலம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிகிறது. சிங்கப்பூர் கணக்கியல் ஆணை யத்தின் தலைவரும் பொதுச் சேவை ஆணையத்தின் உறுப் பினருமான திரு லிம் பயணிகளை மையமாகக் கொண்ட நிறுவனமாக நிலப் போக்குவரத்து ஆணையத்தை மாற்றியதில் பெரும்பங்காற்றினார் என்று போக்குவரத்து அமைச்சு நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

திரு லிம்மைத் தொடர்ந்து நிலப் போக்குவரத்து ஆணையத் தின் தலைவர் பதவியில் அமரவிருக்கும் திரு சான் 2003 ஜனவரி 1 முதல் எஸ்பிஹெச் நிறுவனத்தின் தலைமை நிர்வா கியாக இருந்து வருகிறார். பொதுச் சேவை ஆணையத்தின் உறுப்பினருமான இவர் 'பிஸினஸ் சைனா' என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். போக்குவரத்து அமைச்சில் நிரந்தரச் செயலாளர், வெளியுறவு அமைச்சில் துணைச் செயலாளர், அமரர் லீ குவான் இயூ மூத்த அமைச்சராக இருந்தபோது அவ ருடைய முதன்மை தனிச் செய லாளர் எனப் பொதுச் சேவைத் துறையிலும் திரு சான் பணி யாற்றியிருக்கிறார். "நீண்ட தலைமைத்துவ அனு பவமிக்க திரு சான், சிங்கப்பூர் நிலப் போக்குவரத்தின் எதிர்கால மேம்பாடு தொடர்பில் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு விலைமதிப்பற்ற ஆலோசனை வழங்குவார்," என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

எஸ்பிஹெச் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆலன் சான். படம்: போக்குவரத்து அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!