ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள ஹோட்டலில் தீ

ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள மெரியட் டேங் பிளாசா ஹோட் டலில் நேற்றுக் காலை திடீரென தீ பிடித்தது. அந்த ஹோட்டலின் மூன்றாம் தள கூரையில் காலை சுமார் 9 மணியளவில் தீப்பற்றியதாகவும் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் தெரிவிக்கப் பட்டது. அந்த ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் முதலில் தீயைக் கண்டதாகவும் அது பற்றி உடனே அவர் ஹோட்டலின் தீ கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தெரிவித்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. உடனடியாக நிலையத்தின் 'நிறுவன அவசரகால மீட்புக் குழு' தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது.

காலை 9.10 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் சென்றதையடுத்து இரு தீயணைப்பு வண்டிகள், இரு 'சிவப்பு ரைனோ' வாகனங்கள், இரு தீயணைப்பு மோட்டார் சைக் கிள்கள், ஓர் அவசர மருத்துவ வாகனம், மூன்று துணை வாக னங்கள் ஆகியவை சம்பவ இடம் நோக்கி விரைந்தன. குடிமைத் தற்காப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து 20 நிமிடங்களுக்குள்ளாக தீயை அணைத்தனர். குடிமைத் தற்காப்புப் படையினர் அங்கு செல்வதற்கு முன்பே சுமார் நூறு பேர் தாமாகவே அந்த ஹோட்டலைவிட்டு வெளியேறி விட்டனர்.

மெரியட் ஹோட்டலின் மூன்றாம் தளத்தில் பற்றியெரிந்த தீயை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் 20 நிமிடங்களுக்குள் அணைத்துவிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!