நடனம், இசை, நாடகம் ஆகிய கலைகளைக் கற்பிக்கும் வகுப்புகள், மேடை நாடகங்களுக்கான நுழைவுச் சீட்டுகள் போன்றவை மிகவும் விலையுயர்ந்தவை எனக் கருதும் இளையர்களுக்கு மேடை நாடகம் தொடர்பான கலைகளைக் கற்பித்தல், நாடகங்களைக் காணும் அனுபவத்தை வழங்குதல் ஆகியவற்றுக்கு உதவும் நோக்கில் மேடை நாடக நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 'பிக் பேர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்' எனப்படும் அந்த மேடை நாடக நிறுவனம், பல இளையர்கள் அத்துறையில் ஈடுபட வழி வகுக்கிறது.
மேடை நாடங்களைத் தயாரிப்பதுடன் நாடகங்களில் மேடையேறி நடிக்கும் வாய்ப்புகளையும் இளையர்களுக்கு அளிக்கும் இந்த நாடக நிறுவனம், அனுபவம் இல்லாத நடிகர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நாடகங்களில் நடிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சியையும் வழங்குகிறது. இவ்வாறு 15 இளம் நடிகர் களுக்குத் தற்போது பயிற்சி அளித்து வரும் 'பிக் பேர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்', தொடங்கப்பட்ட ஈராண்டுகளிலேயே மூன்று நாடகங்களை வெற்றிகரமாக மேடையேற்றி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
நாடகம், உளவியல் துறையில் பட்டயக் கல்வி பயிலும் விஷ்ணுசரனுக்கு (வலது) 'முன்மாதிரி மாணவர்' விருதை வழங்கினார் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதல்வர் டான் சூன் ஷியன். படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி