மதுரை: அதிமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தொடர்ந்து மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், தேர்தல் அதிகாரிகள் ஆளும் அதிமுகவுக்கு ஆதர வாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதியும் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாகப் புகார் எழுப்பி இருந்தார்.
இதையடுத்து குறிப்பிட்ட சில அதிகாரிகள் தேர்தல் பணியில் தலையிடக்கூடாது என்றும் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது இதர எதிர்க் கட்சிகளும் அதிமுக மீதும் தேர்தல் ஆணையம் மீதும் இதே குற்றச்சாட்டை சுமத்தி உள்ளன. "மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவின் விளம்பரங்கள், சின்னங்கள் அழிக்கப்படாமல் உள்ளன. தேர்தலுக்காகப் பணிபுரியும் அதிகாரிகள் ஆளுங் கட்சியான அதிமுகவுக்குச் சாதக மாகச் செயல்படுகின்றனர். "தேர்தல் ஆணையம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் பாரபட்சம் என்பது கூடாது," என்றார் முத்தரசன்.
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: அதிமுக அரசு வேடம் போடுவதாக கருணாநிதி குற்றச்சாட்டு