ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: அதிமுக அரசு வேடம் போடுவதாக கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: ஏழு பேரின் உயிர்ப் பிரச்சினையிலும் கூட அதிமுக அரசு வேடம் போடுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ராஜீவ் கொலை வழக்கு குற்ற வாளியான நளினிக்கு பரோல் (தற்காலிகப் பிணை) வழங்குவ தற்கே அதிமுக அரசு தயங்கு வதாகக் கூறியுள்ளார். "நளினிக்கு வழங்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆனால் இந்த அதிமுக ஆட்சியில் பரோல் வழங்குவதற்கே தயங்குபவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லையா? உயிர்ப் பிரச்சினையிலும் வேடம் தானா?" என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் மின்சாரம் என்றாலே அதிர்ச்சிதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆட்சியில் மின்சாரக் கொள்முதல் என்றாலே திடுக்கிடும் திருப்பங் கள் நிறைந்த மர்மக்கதை போல் ஆகிவிட்டது எனத் தெரிவித் துள்ளார். "தமிழகத்தில் ஆட்சி மாற்றத் திற்குப் பிறகு, அதிமுக அரசின் மின்சாரக் கொள்முதல் பிரச்சி னைக்காக மட்டும் தனியே ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது போல் செய்திகள் வருகின்றன. அப் போதுதான் இந்தத் தவறுக்கெல் லாம் யார் காரணம்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு என்ன காரணம் என்பதெல்லாம் வெளியே வரும்," என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!