அதிமுக- திமுக இடையே ரகசிய ஒப்பந்தம்: ராமகிருஷ்ணன் சந்தேகம்

கோவை: ஆணவக் கொலைகள் குறித்து திமுகவும் அதிமுகவும் கருத்தும் கண்டனமும் தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 81 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார். "இக்கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றுவது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இதுவரை கருத்து சொன்னதாகத் தெரியவில்லை. கிரானைட் முறைகேடுகள், ஆணவக் கொலைகள் விவகாரங்களில் அதிமுக, திமுக இடையே 'நீயும் பேசாதே; நானும் பேசவில்லை' என்ற எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளதோ எனச் சந்தேகம் உள்ளது," என்றார் ராமகிருஷ்ணன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!