பணம் தரப் போகிறார்கள்: புகார் எழுப்பும் தமிழிசை

கோவை: சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்கா ளர்களுக்குப் பணம் வழங்க சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக அக்கட்சிகள் ரகசியமான டோக்கன்களை விநியோகித்து வருவதாக கோவையில் செய்தியாளர் களிடம் கூறினார். "தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர, கடந்த நாடா ளுமன்றத் தேர்தலில் பாஜக வுடன் இணைந்து போட்டி யிட்ட கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்.

இம்முறையும் தமிழகத்தில் பாஜக தலைமையில் பலமான கூட்டணி அமையும். தவறினால் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்போம்," என்றார் தமிழிசை. கட்சித் தலைமை சுட்டிக்காட்டும் தொகுதியில் தாம் போட்டியிட இருப்ப தாகக் குறிப்பிட்ட அவர், பாஜக தேர்தல் அறிக்கை இளையர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற் கான திட்டங்களைக் கொண்டிருக்கும் என்றார். "சில அரசியல் கட்சி யினர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்க டோக்கன் வினியோகித்து வருகின்றன. இதை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்," என்று தமிழிசை மேலும் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!