வேட்பாளர் போட்டியில் ஹில்லரி, டிரம்ப் முன்னிலை

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் போட்டி தற்போது நடைபெறுகிறது. அந்த வரிசையில் இதுவரை நடந்த போட்டியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் திருமதி ஹில்லரி கிளின்டன் நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஹில்லரி கிளின்டன், ஃபுளோரிடா, வட கரோலினா, ஒஹையோ, இல்லினாய் ஆகிய நான்கு முக்கிய மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். மிசூரி மாநிலத் திலும் திருமதி ஹில்லரி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். செவ்வாய்க்கிழமை ஃபுளோரிடா, ஒஹையோ ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்தது.

இதில் ஃபுளோரிடாவில் டிரம்ப் வெற்றி பெற்றார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்கோ ரூபியோ தனது சொந்த மாநிலத் திலேயே தோல்வியைத் தழுவிய தைத் தொடர்ந்து வேட்பாளர் போட்டியிலிருந்து அவர் வில கினார். ஆனால் மற்றொரு மாநிலமான ஒஹையோவில் டிரம்ப் அதிர்ச்சித் தோல்வி அடைந் தார். ஒஹையோ மாநில ஆளுநரான ஜான் கெசிக் அங்கு வெற்றி பெற்றார். திரு டிரம்ப் ஒஹையோவில் தோல்வி அடைந்தாலும் ஜூலை மாதம் வரை நடைபெற உள்ள வேட்பாளர் போட்டியில் இன்னும் கூடுதல் மாநிலங்களில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் குடியரசுக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட் பாளராக திரு டிரம்ப் தேர்ந் தெடுக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.

திரு டிரம்ப் தற்போது ஃபுளோரிடா, வட கரோலினா, இல்லினாய் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். மிசூரி மாநிலத்திலும் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தொழிலதிபரான திரு டிரம்ப் கூறி வரும் சர்சைக்குரிய கருத்து களால் அமெரிக்காவில் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அவரது எதிர்ப்பாளர்கள் அண்மையில் ரகளையில் ஈடுபட்டதால் டிரம்பின் சில பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் டிரம்ப், ஃபுளோரிடாவில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் குடியரசுக் கட்சி மூத்த உறுப்பினர்கள் சிலர், தாங்கள் டிரம்ப்பை ஆதரிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!