நக்மா: மோதல் வேண்டாம்

சென்னை: கோஷ்டி மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மகளிர் காங்கிரசாருக்கு அக்கட்சியின் பொதுச்செயலரும் நடிகையுமான நக்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் மகளிர் காங்கிரஸ் சார்பில் விவசாய தொண்டர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், மோதல் போக்கை கடைபிடிக்காமல் கட்சி யினர் இணக்கமாகச் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.

"காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருப்பது சகஜம். அதை நமக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். தனித்துச் செயல்படு வது கண்டனத்திற்குரியது. இனி கோஷ்டிப் பூசலுடன் செயல்பட்டால், அவர்கள் மீது கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் நக்மா. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும் என கட்சித் தலைமை யிடம் வலியுறுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் முறையாக செயல்படுத்த வில்லை என குற்றம்சாட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!