மாற்றி அமைக்கப்படவுள்ள அப்பர் அல்ஜுனிட் சாலைப் பகுதி

புதிய பிடாடாரி குடியிருப்புப் பேட்டையில் ஒரு பூங்காவையும் பேருந்து நிலையத்தையும் அமைப்பதற்காக அப்பர் அல்ஜுனிட் ரோட்டின் ஒரு பகுதி மூடப்படும் (படம்). தற்போது அப்பர் அல்ஜுனிட் சாலையை இணைக்கும் அப்பர் சிராங்கூன் சாலையின் கிட்டத்தட்ட 500 மீட்டர் தூர பகுதி மூடப்பட்டு அதற்கு பதில் மாற்று சாலை சற்று தள்ளி அமைக்கப்படும். இந்தப் புதிய சாலை உட்லேய் எம்ஆர்டி நிலையத்திற்குப் பிறகு பொத்தோங் பாசிர் வாட்டாரத்தை நோக்கிச் செல்லும் வழியில் தொடங்கி அப்பர் அல்ஜுனிட் சாலையுடன் இணையும்.

இவ்வாண்டு இறுதியில் புதிய பாதை திறக்கப்பட்டு தற்போது உள்ள பாதை மூடப்படும் என்று வீவக தெரிவித்தது. மூடப்பட்ட சாலை பாதசாரிகள் நடக்கும் இடமாக மாற்றப்படும். மேலும் பிடாடாரி பேட்டையில் சைக்கிளோட்டிகளுக்கான தடமும் இடம்பெறும். அத்துடன் தெற்கில் காலாங் பூங்காவையும் வடக்கில் சுங்கை சிராங்கூன், பொங்கோல் பூங்கா ஆகியவற்றையும் இணைக்கும் பூங்கா இணைப்புப் பாதை அமையும். அப்பர் அல்ஜுனிட் சாலை மாற்றி அமைக்கப்படுவதால் உட்லேய் எம்ஆர்டி அருகே எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தையும் உருவாக்க வழிவகுக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!