சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1.9% ஆக சரியலாம்

இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக் கணிப்பை 2.2 விழுக்காட்டில் இருந்து 1.9 விழுக்காடாக ஆய்வாளர்கள் குறைத்திருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட காலாண்டு ஆய்வு காட்டுகிறது. வர்த்தகத் தொழில் அமைச்சு அதிகாரபூர்வமாக முன்னுரைத்த 1 முதல் 3 விழுக்காடு வளர்ச்சி விகிதத்திற்குள் ஆய்வாளர்களின் கணிப்பு இடம்பெறுகிறது. உற்பத்தித் துறை 2.7 விழுக் காடு சுருங்கும் என இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. முந்திய கருத்துக்கணிப்பில் முன்னுரைக் கப்பட்ட 1.2 விழுக் காட்டைவிட இது மோசமான நிலை. நிதி, காப்புறுதித் துறையிலும் ஆய்வாளர்களுக்கு நம்பிக்கைக் குறைந்திருக்கிறது.

இந்தத் துறை 2016ல் 3.6 விழுக்காடு வளர்ச்சி அடையும் என ஆய்வாளர்கள் கணிக் கின்றனர். டிசம்பர் மாதக் கருத்துக் கணிப்பில் ஆய்வாளர் கள் கணித்த 5.9 விழுக்காடு வளர்ச்சியை விட இது குறைவு. ஆனால், கட்டுமானத் துறை யில் ஆய்வாளர்களின் நம்பிக் கை கூடியிருக்கிறது. முந்திய கருத்துக்கணிப்பில் முன்னுரைக்கப்பட்ட 1.2% வளர்ச் சிக்குப் பதிலாக, இப்போது 2.6% வளர்ச்சி முன்னுரைக்கப்பட்டுள் ளது. சிங்கப்பூரின் மொத்த உள் நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டில் 2.5 விழுக்காடு வளர்ச்சி அடையும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க் கின்றனர். இவ்வாண்டின் பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்புகளையும் ஆய்வாளர்கள் குறைத்திருக் கின்றனர்.

அனைத்துப் பொருட்களுக்கு மான மொத்த பயனீட்டாளர் விலைக் குறியீடு 0.2 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. டிசம்பர் மாதக் கருத்துக்கணிப்பில் 0.5 விழுக்காடு உயர்வு எதிர்பார்க்கப் பட்டது. தங்குமிடம், தனியார் சாலைப் போக்குவரத்துச் செலவுகள் ஆகி யவை தவிர்த்த மூல பணவீக்கம் 0.8 விழுக்காடு உயரும் என முன்னுரைக் கப்படுகிறது. முந்திய கருத்துக் கணிப்பில் 1 விழுக்காடு உயர்வு கணிக்கப் பட்டது. அதிகாரத்துவ முன்னுரைப் பின்படி, மொத்த பணவீக்கம் இவ்வாண்டு பூஜியம் விழுக்காடு முதல் 1 விழுக்காடு வரை குறையும் என்றும், மூல பண வீக்கம் 0.5 விழுக்காடு முதல் 1.5 விழுக்காடு வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரின் பொருளியலை அணுக்கமாகக் கண்காணிக்கும் 24 ஆய்வாளர்களின் கருத்து களைக் கருத்துக் கணிப்புத் தொகுத்தளிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!