நாக்பூர்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 'சூப்பர் 10' சுற்றின் முதல் ஆட்டத்திலேயே இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்ததற்கு மோசமான பந்தடிப்பே காரணம் என்று தமது அணியினர் பற்றி காட்டமாக பேசி னார் அணித் தலைவர் டோனி. நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ண யித்த 127 ஓட்டங்கள் என்ற எளிதான வெற்றி இலக்கைகூட எட்ட முடியாமல் 47 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது ரசிகர் களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்தது. ஆண்டர்சன் 42 பந்தில் 34 ஓட்டங்களும் விக்கெட் காப்பாளர் ரோஞ்ஜி 11 பந்தில் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
அஸ்வின், நெஹ்ரா, பும்ரா, ஜடேஜா, ரெய்னா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இந்திய அணி, 18.1 ஓவர்களில் 79 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து 47 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. அணித் தலைவர் டோனி அதிகபட்சமாக 30 பந்தில் 30 ஓட்டங்களும் கோஹ்லி 23 ஓட்டங்களும் அஸ்வின் 10 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. சான்ட்னெர் 4 விக்கெட்டுகளையும் சோதி 3 விக்கெட்டுகளையும் மெக்கல்லம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.