சுவாமியை விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்து

புதுடெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே நெருங்கிய தொடர் புள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எனவே மல்லையா வெளிநாடு சென்றது தொடர்பில் சுப்பிரமணி யன் சுவாமியை விசாரிக்க வேண் டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் செய்தியாளர் களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரமோத் திவாரி, மல்லையா வெளிநாடு செல்ல பிரதமர் மோடி ஆதரவளித்தாரா? என்பது தெரிய வேண்டும் என்றார்.

"மல்லையாவுக்கும் சுப்பிரமணி யம் சுவாமிக்கும் மிகவும் நெருங் கிய தொடர்புள்ளது. சுவாமியின் ஜனதா கட்சியில் 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை விஜய் மல்லையா தேசிய செயல் தலைவராக இருந்தார். "ஆகையால், இந்த விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி யிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளி நாட்டுக்கு மல்லையா தப்பிச் செல்வதற்கு சுப்பிரமணியன் சுவாமி உதவினாரா? இதற்கு பிரதமர் மோடி ஆதரவு அளித் தாரா? என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்," என்றார் பிரமோத் திவாரி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!