பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 4 சிங்கப்பூரர்கள் கைது

வெளிநாடுகளில் நடந்த ஆயு தத்துடன் கூடிய சண்டையில் பங்கெடுத்ததற்காக அல்லது பங்கெடுக்கும் நோக்கத்துடன் இருந்ததற்காக சிங்கப்பூரர்கள் நால்வர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர் என்று உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. முகம்மது ரஸிஃப் யஹ்யா, 27, அமிருதீன் சவீர், 53, ஆகிய இருவரும் ஏமனில் நடந்த இன மோதல்களில் தாமாகவே முன் சென்று பங்கெடுத்தமைக்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் கைதாகினர்.

மூன்றாமவரான முகம்மது மொகைதீன் முகம்மது ஜெய்ஸ், 25, போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடு ஒன்றில் ஆயுதமேந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட தாகக் கூறப்பட்டது. இதற்காக, அவரது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான கட்டுப்பாட்டு ஆணை அவருக்கு இந்த மாதம் விதிக்கப்பட்டது. அதேபோல, வாங் யுவான் டோங்யி, 23, என்பவருக்கும் இம்மாதத்தில் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது. ஐஎஸ் அமைப்பை எதிர்த்துப் போரிடும் குர்தியப் போராளிப் பிரிவில் சேர்வதற்காக சிங்கப்பூரை விட்டு வெளியேறி துருக்கி, சிரியாவை நோக்கி அவர் பயணம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் வேண்டுகோளை அடுத்து, அவர் பயணம் செய்த இன்னொரு மூன்றாவது நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் அவரைக் கண்டு பிடித்து மீண்டும் அவரை சிங்கப்பூருக்குத் திருப்பியனுப் பினர்.

2010 ஜனவரியில் ஏமனில் உள்ள சமய நிலையம் ஒன்றில் ரஸிஃப் பயின்று வந்ததாகவும் அதே நிலையத்தில் 2013 ஜூலையில் அமிருதீன் தமது கல்வியைத் தொடங்கியதாகவும் கூறப்பட்டது. அவர்கள் இருவரும் அங்கு உள்ள பள்ளி ஒன்றில் தாமாகவே முன்வந்து ஆயுதமேந்தி காவல் காத்தனர். 2014 முதல் ஏமன் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி வரும் ‌ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சி யாளர்கள் அப்பள்ளி மீது தாக் குதல் நடத்தக்கூடும் என எதிர் பார்க்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!