தமிழகம்: 17,000 குண்டர்களை ஊரைவிட்டு வெளியேற்றத் திட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குண்டர்களின் பட்டியலைத் தயார் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்தப் பட்டியல் தயாரானதும் குண்டர்கள் அனைவருக்கும் கடு மையான எச்சரிக்கை விடுக்கப்படு வதுடன் அவர்கள் எல்லாரும் தேர்தல் முடியும் வரை தங்களது சொந்த ஊரை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

"அண்மையில், தேர்தல் ஆணையம் காவல்துறை தலைமை இயக்குநரகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், தேர்தலுக்கு முன்பாக சமூக விரோதக் கும்பல்களின் பட்டி யலையும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குண்டர்களின் பட்டி யலையும் தயார் செய்யுமாறு கூறப் பட்டிருந்தது. இதையடுத்து, குண்டர் பட்டியலைத் தயார் செய் யும் பணியில் போலிஸ் மும்முர மாகச் செயல்பட்டது. கடைசியாக அப்படியொரு பட்டியல் 2012ஆம் ஆண்டு தயார் செய்யப்பட்டது," என்று அவ்வட்டாரங்கள் கூறின. இந்நிலையில், சென்னையில் மட்டும் 3,500 குண்டர்கள் இருப்ப தாக புதிய பட்டியல் தெரிவிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 1,980, மதுரை மாவட்டத்தில் 1,300, கோவை மாவட்டத்தில் 815, கன்னியாகுமரி மாவட்டத்தில் 700, சேலத்திலும் திருச்சியிலும் தலா 700 எனத் தமிழகத்தில் மொத்தம் 17,350 குண்டர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் (416), விழுப்புரம் (416), விருதுநகர் (665), தூத்துக் குடி (605), திருவள்ளூர் (345) ஆகிய மாவட்டங்களிலும் ரௌடி களின் ஆதிக்கம் இருக்கிறது. இந்தப் பட்டியலை உள்ளூர் போலிசாரும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து தயார் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், தேர்தல் முடியும் வரை அந்த குண்டர்களைச் சம்பந் தப்பட்ட இடங்களில் இருந்து அப் புறப்படுத்துமாறும் தேர்தல் ஆணை யம் போலிஸ் தலைமை இயக்கு நரகத்தைக் கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே, காணொளிக் கலந்துரையாடல் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் பேசிய தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, அவர்களி டம் தேர்தல் ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காகக் கூடுதல் படையினரை அனுப்பும்படி மத்திய அரசிடம் கோரியுள்ளதாக வும் அப்போது அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!