அதிகமானோர் உதவி நாடினர்

வேலைவாய்ப்பு, வேலைத்திறன் தொடர்பில் ஐநூற்றுக்கும் அதிக மான நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (பிஎம்இ) தொழிலாளர் இயக்கத்திடம் கடந்த ஆண்டு உதவி கோரினர். அவர்களில் 23 விழுக்காட்டினர் 40 வயதிற்கும் குறைந்தவர்கள். சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை ஆட்குறைப்பால் வேலையிழந்த அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட 518 'பிஎம்இ'க்களுக்கு தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) உதவிக்கரம் நீட்டியது. முந்தைய ஆண்டில் இப்படி ஆட்குறைப்பு அல்லது பணிநீக்கத் தால் வேலை இழந்த 253 பேருக்கு என்டியுசி கைகொடுத்தது.

இப்போதைய நிலையில்லாத பொருளியல் சூழ்நிலையில் 'பிஎம்இ'க்கள் ஆட்குறைப்பு செய்யப் படுவது அதிகமாகக்கூடும் என்று கணித்துள்ளார் என்டியுசி துணைத் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே. "ஊழியரணி மூப்படைந்து வரும் நிலையில், நாற்பது வயதைத் தாண்டிய 'பிஎம்இ'க்கள் பணி நீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின் மையால் அதிகம் பாதிக்கப்படும் அங்கத்தினராக இருப்பது கவலை அளிக்கிறது," என்றார் திரு டே. முதிர்ச்சியடைந்த ''பிஎம்இ'க் களை நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக 'வாழ்க்கைத்தொழில் ஆதரவுத் திட்டம்' போன்ற நடவடிக்கைகள் இப்போது இடம்பெற்று வருகின்றன.

குறைந்தபட்சம் ஆறு மாத காலம் வேலையில்லாமல் இருந்து $4,000 மற்றும் அதற்கு அதிகமான ஊதியத்தில் 40 வயதிற்கு மேற் பட்ட 'பிஎம்இ'க்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு வாழ்க்கைத்தொழில் ஆதரவுத் திட்டம் மூலம் மானியங்கள் கிடைக்கும். வயது, வேலையின்றி இருந்த காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாது ஆட்குறைப்பு செய்யப் பட்ட அனைத்து 'பிஎம்இ'க்களுக் கும் உதவும் விதமாக வாழ்க்கைத் தொழில் ஆதரவுத் திட்டம் விரிவு படுத்தப்பட வேண்டும் என்று என்டியுசி அரசாங்கத்திடம் வேண்டு கோள் விடுத்துள்ளது. அத்துடன், இத்திட்டத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக்க நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையும் உயர்த்தப் படும் என்றும் என்டியுசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!