மகிழ்ச்சியான நாடு: டென்மார்க் முதலிடம்; 22வது இடத்தில் சிங்கப்பூர்

உலகில் ஆக மகிழ்ச்சியான நாடுகளில் சிங்கப்பூர் 22ஆம் இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இருப்பினும், ஆசியாவிலேயே மகிழ்ச்சிமிக்க நாடாக சிங்கப்பூர் தேர்வு பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் சார்பில் அண்மையில் வெளியீடு கண்டது 'உலக மகிழ்ச்சி அறிக்கை 2016'. மகிழ்ச்சிக் குறியீட்டில் 7.526 புள்ளிகளைப் பெற்று உலகிலேயே ஆக மகிழ்ச்சியான நாடாகத் தேர்வு பெற்றது டென்மார்க். 7.509 புள்ளிகளைப் பெற்ற சுவிட்சர்லாந்து இரண்டாமிடம் பிடித்தது. ஐஸ்லாந்து, நார்வே, ஃபின் லாந்து, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவீடன் ஆகியவை முதல் பத்து இடங்களைப் பிடித்த மற்ற நாடுகள்.

சிங்கப்பூருக்கு 6.739 புள்ளி கள் கிட்டின. தாய்லாந்து (33), மலேசியா (47), ஜப்பான் (55), தென்கொரியா (58), ஹாங்காங் (75), இந்தோ னீசியா (79), பிலிப்பீன்ஸ் (82), சீனா (83) ஆகியவை முதல் நூறு இடங்களுக்குள் வந்த மற்ற ஆசிய நாடுகள். ஆய்வில் பங்கெடுத்த 157 நாடுகளில் மடகாஸ்கர், தான் சானியா, லைபீரியா, கினி, ருவாண்டா, பெனின், ஆப்கா னிஸ்தான், டோகோ, சிரியா, புருண்டி ஆகிய நாடுகள் கடைசி பத்து இடங்களைப் பிடித்தன.

ஒவ்வொரு நாட்டிலும் சுமார் 3,000 பேரிடம் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வாழ்நாளில் ஆரோக்கியமாக வாழும் ஆண்டு காலம் உள்ளிட்ட பதினொரு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப் பட்டன. லஞ்சம், ஊழல் இல்லா அர சாங்கம், வர்த்தகம் ஆகியவை தொடர்பிலும் கேள்விகள் கேட்கப்பட்டு மகிழ்ச்சிக் குறியீடு மதிப்பிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!