16 மாதத்திற்குப் பின் கட்சி அலுவலகம் சென்ற ஜெயா

சென்னை: எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 16 மாதங்களுக்குப் பின்னர் நேற்று அதிமுக தலைமை அலுவல கத்திற்கு வருகை தந்த அவர், பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்த ஜெயலலிதா, கர்நா டகா உயர் நீதிமன்றத் தீர்ப்பை யடுத்து விடுதலையானார்.

மீண்டும் முதல்வராகப் பதவி யேற்ற பின்னர் சிலமுறை அவர் தொண்டர்களை நேரடியாக சந்தித் திருந்தாலும், கட்சி அலுவலகத் திற்கு வந்து யாரையும் சந்திக்க வில்லை. இந்நிலையில் 16 மாதங்களுக்குப் பின்னர் அவர் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த தால் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த உற்சாக மடைந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!