‘நடைபாதையில் மின்சைக்கிள் செல்ல அனுமதிக்கக்கூடாது’

சைக்கிள்கள், சக்கர நாற்காலி போன்ற நடமாட உதவும் சாதனங் களை நடைபாதையில் அனுமதிக்க லாம் என்று இயக்க சாதனங்கள் குறித்து விதிமுறைகளை வகுத்து வரும் குழு பரிந்துரைத்துள்ளது. மின்சைக்கிள்கள் தவிர தனி நபர் இயக்க சாதனங்கள் அனைத் தும் நடைபாதையில் செல்ல அனு மதிக்கப்பட வேண்டும் என்றும் ஆனாலும் அவற்றின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டரைத் தாண்டக்கூடாது என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் காலால் தரையில் உந்திச் செல்லும் ஸ்கூட்டர்கள், மின்ஸ்கூட்டர்கள், ஒற்றைச் சக்கர சைக்கிள்கள் ஆகியவை அடங்கும். இப்போது, தெம்பனிசில் மட்டும் தான் நடைபாதைகளில் சைக்கிள் ஓட்ட முடியும். மற்ற இடங்களில் உள்ள நடைபாதைகளில் சைக்கி ளோட்டினால் முதன்முறை $30 அபராதம் விதிக்கப்படும்.

நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் தலைமையி லான 14 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு புதிய விதி களையும் வழிகாட்டி நெறிமுறை களையும் நேற்று முன்மொழிந்தது. பயனாளிகளுக்கான விதி முறைகளும் நடத்தை விதிகளும், நடைபாதை, சைக்கிளோட்ட பாதை கள் மற்றும் பாதசாரிகளும் சைக் கிளோட்டிகளும் பயன்படுத்தக் கூடிய பகிர்வுப் பாதைகளில் அனு மதிக்கப்பட வேண்டிய சாதனங்கள், பொதுவெளிகளில் அனுமதிக்கப் படும் சாதனங்களுக்கான விதி முறைகள் என்ற மூன்று பிரிவு களின்கீழ் அக்குழுவின் பரிந்துரை கள் இடம்பெற்றுள்ளன.

"நடைமுறைக்கு உகந்த, தெளிவான, நியாயமான, மிக முக்கியமாக அனைத்துப் பயனாளி களுக்கும் பாதுகாப்பான விதி முறைகளையும் நடத்தை விதி களையும் உருவாக்குவதில் குழு கவனம் செலுத்தியது," என்று டாக்டர் ஃபைசல் குறிப்பிட்டார். சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் ஒவ்வொருவரின் ஆர்வங் களையும் அவர்களுக்கான வெளி யையும் விரிவுபடுத்துவது சாத்திய மில்லை என்றார் டாக்டர் ஃபைசல். "இருப்பினும், கனிவுமிக்க, பாதுகாப்பான கலாசாரத்தை நாம் உருவாக்க முடிந்தால் ஒவ்வொரு வரின் தேவைகளையும் நம்மால் பராமரிக்க இயலும்," என்றும் அவர் சொன்னார். இக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வழக்கமான சைக்கிள் களைப் பயன்படுத்தும் பயணிகள் அவற்றை நடைபாதையில், பகிர்வுப் பாதையில் மற்றும் சாலைகளில் ஓட்ட முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!