சமரச மசோதா: பொதுமக்கள் கருத்துகளுக்கு வரவேற்பு

சமரசத்திற்கான கட்டமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு முன்மொழியப்பட்டுள்ள சமரச மசோதா குறித்து பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுவதாக சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த மசோதா சட்டமாவது தொடர்பில் நேற்று தொடங்கிய பொதுமக்கள் ஆலோசனை அடுத்த மாதம் 28ஆம் தேதியுடன் நிறைவுபெறும். குறிப்பாக, அனைத்துலக வர்த்தக சமரசத்தில் கூடுதல் சட்ட ஆதரவை வழங்கவும் சிங்கப்பூரில் இடம்பெற்ற சமரச முயற்சிகளில் எட்டப்பட்ட தீர்வுகளை அமல்படுத்தும் வகையில் கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்த சமரச மசோதா வழி வகுக்கிறது.

சமரசத் தீர்வு உடன்பாட்டை நீதிமன்ற ஆணையாகப் பதிவு செய்தல், சமரச நடவடிக்கைகள் குறித்த ரகசியத்தன்மை, நீதி மன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தல், சட்டத் தொழில் சட்டத் தின்கீழ் வரும் விதிவிலக்குகள் ஆகிய முக்கிய நான்கு அம்சங் களை சமரச மசோதா உள்ள டக்கியுள்ளது. சமரசத்திற்கான கட்டமைப்பை வலுப்படுத்துதல், சிங்கப்பூரை அனைத்துலக வர்த்தகச் சமரச மையமாக உருவாக்குதல் ஆகியவை தொடர்பில் அனைத்துலக வர்த்தக சமரச பணிக்குழு 2013 ஏப்ரலில் செய்த பரிந்துரைகளை அடுத்து இந்தச் சமரச மசோதா முன்மொழியப்பட்டது.

இந்த மசோதா குறித்த விவரங்களை bit.ly/22od3un என்ற இணையப் பக்கத்தில் காணலாம். ஆர்வமுடையோர் Legal Industry Division, Ministry of Law, 100 High Street, #08-02, The Treasury, Singapore 179434 என்ற முகவரிக்கோ அல்லது MLAW_Consultation @mlaw.gov.sg என்ற மின்னஞ் சலுக்கோ தங்கள் கருத்துகளை எழுதலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!