அமரர் லீ குவான் இயூவுக்கு முதலாண்டு நினைவு அஞ்சலி

ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

மறைந்­து­விட்­டா­லும் மக்கள் மனதில் இன்னும் நீங்காத இடம் பிடித்­துள்­ளார் என்பது நேற்று நடந்த அமரர் திரு லீ குவான் இயூவின் முதல் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்­சி­யில் புலப்­பட்­டது. மக்கள் செயல் கட்சி தலைமையகத்­தில் நேற்று மாலை நடந்த இந்­நி­கழ்ச்­சி­யில் மக்கள் கழக அடித்­தளத் தலை­வர்­கள், கட்சி ஆர்­வ­லர்­கள் என கிட்டத்தட்ட 250 பேர் கலந்­து­கொண்ட­னர். போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரும் மக்கள் செயல் கட்­சி­யின் மத்திய நிர்­வா­கக் குழுத் தலை­வ­ரு­மான திரு கோ பூன் வான் இந்­நி­கழ்ச்­சி­யில் உரை­யாற்­றினார்.

"எதிர்காலத்தை நம்மால் கணிக்க இயலாது. ஆனால், எது நடந்தாலும் சமாளிக்க நம் மக்களை நம்மால் தயார்ப்படுத்த முடியும். மெத்தனமாக இருக்காமல் கனவு காண்பதுதான் முக்கியம்," என்றார் அவர். ஏழு தவணை களுக்கு நாடாளுமன்ற உறுப்பின ராக சேவையாற்றிய இங் கா திங், 76, இளம் மசெக ஆர்வலர் நிக்கோல் லியோங், 32, ஆகியோர் அமரர் லீ குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணைப் பிரதமர்கள் தர்மன் சண்முகரத்னம், டியோ சீ ஹியன், ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோரும் பங்கேற்றனர்.

மக்கள் செயல் கட்சி தலைமையகத்­தில் நேற்று இரவு நடந்த இந்­நி­கழ்ச்­சி­யில் கட்சியின் தலைவர் கோ பூன் வான் நினைவுப் பொருளைத் திறந்து வைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!