குடியேறிகள் பிரச்சினை: துருக்கியுடன் உடன்பாடு காண பிரசல்ஸில் பேச்சு

பிரசல்ஸ்: குடியேறிகள் பிரச்சினைக்குத் தீர்வு காண துருக்கி யுடன் உடன்பாடு காண்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பிரசல்ஸில் பேச்சு தொடங்கி யுள்ளனர். ஐரோப்பிய நாடுகளை நாடி வரும் குடியேறிகள் மற்றும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து துருக்கியுடன் பேச்சு நடத்தி வருகின்றன. இருப்பினும் இது தொடர்பாக உடன்பாடு காண்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. குடியேறிகளை ஏற்பதற்கு துருக்கி சில நிபந் தனைகளை முன்வைத்துள்ளது.

துருக்கியப் பிரதமர் அகமட் டவுடோகுலு இன்றைய பிரசல்ஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார். குடியேறிகள் வருகையை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உத்தேசத் திட்டத்தை வகுத்துள்ளன. துருக்கி வழியாக கிரீஸ் வந்தடையும் குடியேறிகள் அல்லது அகதிகளை திருப்பி அனுப்ப உத்தேசத் திட்டம் வழிவகுக்கிறது. பிரசல்ஸில் சென்ற வாரம் நடந்த கூட்டத்தின்போது இந்த உத்தேசத் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை ஏற்க துருக்கி இணங்கினால் அந்நாட்டுக்கு நிதி உதவியும் மற்ற சலுகைகளும் வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

துருக்கிக்கு திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தானிய குடியேறிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!