ஜெயா படத்துடன் குக்கர்கள், - தலைக்கவசங்கள் பறிமுதல்

புதுடெல்லி: தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்தி வரும் அதிரடி சோதனையின் போது, வாக்காளர்களுக்கு விநி யோகம் செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல்வேறு பொருட்களும் பிடிபட்டு வருகின் றன. அந்த வகையில் திண்டிவனத் தில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட தலைக்கவசங்க ளும் (ஹெல்மெட்), குக்கர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இங்குள்ள ஓமந்தூர் பகுதியில் உள்ள சவுக்குத்தோப்பில் இப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட் டுள்ளதாகவும், தேர்தல் நெருங் கும் வேளையில் அவை வாக்கா ளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் என்ற போர்வையில் விநியோகம் செய்யப்பட இருப்பதாகவும் பறக் கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரடைந்த அதிகாரிகள், உடனடியாக ஓமந் தூர் விரைந்தனர்.

அங்குள்ள சவுக்குத்தோப்பில் நுழைந்து அதி காரிகள் சோதனை மேற்கொண்ட போது, தலைக்கவசங்களும் குக்கர்களும் பதுக்கி வைக்கப் பட்டது தெரியவந்தது. அவற்றுள் பல ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. எனவே அதிகாரிகள் சோத னையிட வருவது அப்பொருட் களைப் பதுக்கியவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. மொத்தம் 189 தலைக்கவசங்களையும் 21 குக்கர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை அனைத்திலும் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டு இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!