தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் புதியவர்கள்

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மொத்தம் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர் கள் கலை, வர்த்தகம், ஊடகம் சுகாதாரம், கல்வி என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். ஒன்பது பேரில் நால்வர் பழைய முகங்கள். அவர்கள் இதற்கு முன் இருந்த நியமன உறுப்பினர்கள் குழுவில் இருந்தவர்கள். புதியவர்கள் ஐவரில் நிறுவன நிர்வாக இயக்குநரும் முஸ்லிம் நிபுணத்துவத் தொழிலர் சங்கத்தின் தலைவருமான 54 வயது அஸ்முன் அகம்மது, ஊடக நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரான 49 வயது கணேஷ் ராஜா ராம், கலை இயக்குநரான 50 வயது கொக் ஹெங் லியுன், சட்டப் பேராசிரியரான 37 வயது மகாதேவ் மோகன், அனுபவமிக்க தொழிற்சங்கவாதியான 50 வயது குமாரி தனலட்சுமி ஆகியோர் அடங்குவர்.

முந்தைய நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் இருந்த வழக்கறிஞரும் உடற்குறையுள் ளோர் சங்கத்தின் தலைவருமான 54 வயது சியா யோங் யோங், சிங்கப்பூர் சீன வர்த்தக தொழில் சபையின் தலைவரான 62 வயது தாமஸ் சுவா, சமூக தொழில் முனைவரான 39 வயது குய்க் ‌ஷியாவ் யின், தொழிலாளர் பொரு ளியல் நிபுணரான 52 வயது ரோன்டோல்ஃப் டான் ஆகிய நால்வர் மீண்டும் புதிய தவணைக் குத் தேர்வு பெற்றுள்ளனர். புதிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் இந்தியர் கள். தமிழ் முரசிடம் பேசிய அவர் களில் ஒருவரான திரு கணேஷ் ராஜாராம், இப்பொறுப்புக்கு சக ஊடக உறுப்பினர்களால் நியமிக் கப்பட்டதில் பெருமிதம் கொள்வ தாகக் குறிப்பிட்டார். ஃப்ரிமெண்டல் மீடியா இண்டர் நேஷனல் நிறுவனத்தின் ஆசிய பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவராக உள்ளார் திரு கணேஷ் ராஜாராம்.

திரு கணேஷ் ராஜாராம், குமாரி தனலட்சுமி, மகாதேவ் மோகன். படங்கள்: கணேஷ் ராஜாராம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

படங்கள்: கணேஷ் ராஜாராம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!