புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்

எவ்வித பயங்கரவாதத் தாக்குத லையும் சமாளித்து, சிங்கப்பூரைப் பாதுகாக்க உடலளவிலும் மனத் தளவிலும் மிகச் சிறந்த பயிற்சி பெற்ற புதிய போலிஸ் விரைவு எதிர்நடவடிக்கைப் பிரிவு உரு வாக்கப்படுகிறது. இந்த அவசரகால எதிர்நடவ டிக்கைக் குழுக்கள் ஒரே சமயத் தில் பல இடங்களில் நடத்தப்படும் தாக்குதல்களைச் சமாளிக்கும் திறன் பெற்றிருக்கும். அக்குழுவில் உள்ளவர்கள் தொடர் எதிர்தாக்குதல் நடத்தும் திறன் பெற்றிருப்பதுடன் பலவித மான ஆயுதங்களைப் பயன் படுத் தக் கூடியவர்களாகவும் இருப்பார் கள்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அறிமுகப்படுத்தப்பட்டிருக் கும் மூன்று புதிய திட்டங்களில் இதுவும் ஒன்று என்றார் உள்துறை அமைச்சர் கா. சண்முகம். அவர் நேற்று உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரிகளி டம் பேசியபோது இவ்விவரங்க ளைத் தெரிவித்த அமைச்சர், பயங்கரவாதத் தாக்குதல் மிரட்டல் எங்கும் நிலவுகிறது என்று எச்சரித்தார். எதிர்நடவடிக்கை முக்கியம் "ஒரு தாக்குதல் நிகழும்போது, அதை எதிர்த்து நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது மிகவும் முக்கியம்," என்று குறிப்பிட்ட திரு சண்முகம், கடந்த நவம்பரில் நடந்த பாரிஸ் தாக்குதலின்போது, பயங்கரவாதிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடர் தாக்குதலை நடத்தியதைச் சுட்டினார். மேலும், உள்துறை அமைச்சு சமூகத்தின் பங்களிப்பை ஒன்று திரட்ட, 'எஸ்ஜி பாதுகாப்பு' என்ற புதிய தேசிய பாதுகாப்புத் திட் டத்தை உருவாக்கி, அறிமுகப்படுத் தும் என்றும் அமைச்சர் சொன் னார். சமூக ஒற்றுமையையும் ஒருங்கி ணைப்பையும் மேம்படுத்தும் நோக் கில் கடந்த பத்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சமூக ஈடுபாட் டுத் திட்டத்தின் மறுமலர்ச்சி திட் டமாக 'எஸ்ஜி பாதுகாப்பு' திட்டம் அமையும்.

சிங்கப்பூர் போலிஸ் படையின் சிறப்பு உத்திகள், மீட்புப் பிரிவினர் பயங்கரவாத மாதிரி எதிர்ப்பு நடவடிக்கை. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!