மே மாதம் பிரதமர் ஆஸ்திரேலியா பயணம்

தற்காப்பு ஒத்துழைப்பை மேம்படுத் தும் உடன்பாடு உட்பட, சிங்கப் பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் பற்பல புதிய உடன் பாடுகள் செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மே மாதம் பிரதமர் லீ சியன் லூங் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுகிறார். இரு நாடுகளின் வெளியுறவு, வர்த்தக, தற்காப்பு அமைச்சர் களுக்கு இடையிலான சந்திப்பு களைத் தொடர்ந்து, பிரதமரின் வருகை நேற்று சிட்னியில் அறி விக்கப்பட்டது. பிரதமரின் பயணம் மே மாதக் கடைசியில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

சந்திப்புகளின்போது கலந்து பேசப்பட்ட விவகாரங்களில் தென் சீனக்கடலில் கப்பல் செலுத்து வதற்குத் தேவைப்படும் சுதந்திரம், இரு நாட்டு மாணவர்களும் ஒருவர் மற்றவரது நாடுகளில் படிக்கவும் மாணவப் பயிற்சி யாளராகப் பணி ஏற்கவும் புதிய வழிகளைக் கண்டு பிடிக்கும் முயற்சி ஆகியவை உள்ளடங்கும். திரு லீயின் எதிர்வரும் பயணத் தின்போது, தற்காப்பு, வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இரு நாட்டுப் பிரதமர்களும் முயற்சி மேற்கொள்வார்கள் என வெளி யுறவு அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் சொன்னார். ‚"சிங்கப்பூர் பிரதமர் மே 26ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு வருகையளிப்பார் என எதிர்பார்க் கிறோம்," என்றார் அவர்.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகியவற்றின் மூன்று அமைச்சர்களின் சந்திப்புக்குப் பிறகு ஆஸ்திரேலியா வின் சிட்னி துறைமுகத்துக்கு அருகில் நேற்று புகைப்படம் எடுத்துக் கொண்ட (இடமிருந்து) சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் மரிஸ் பெய்ன், ஆஸ்திரேலிய வர்த்தக, முதலீட்டு அமைச்சர் ஸ்டீவன் சியுபோ, சிங்கப்பூரின் வர்த்தக தொழில் (வர்த்தகம்) அமைச்சர் லிம் ஹங் கியாங், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சிறப்புத் தூதர் ஆண்ட்ரூ ரோப். படம்: இங் எங் ஹென் ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!