அசினுக்கு கெட்டிமேளம்

அசின் அவரது காதலர் ராகுல் சர்மா திருமணம் குறித்து விதவிதமான தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இருவரும் அதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள். அசின் - ராகுல் சர்மா ஜோடி வருகிற 20ஆம் தேதி உறவினர்கள், நண்பர்கள் சாட்சியாக கணவன், மனைவி ஆகிறார்கள். இந்தத் திருமண விழா டெல்லியில் நடைபெறுகிறது. அங்கு உள்ள பிரபல தங்கு விடுதியில் திருமணத்துக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இரண்டு நாள் திருவிழாவாக இதை நடத்த முடிவு செய்துள்ளனர்.

முதல் நாளான 19ஆம் தேதி நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள், நண்பர்கள் பங்கேற்கி றார்கள். இது 'மெகந்தி' விழா. இது பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது. 20 ஆம் தேதி திருமணம் நடக்கிறது. இதை எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு குடும்பத்தினர், ராகுலின் டெல்லி வட்டார நண்பர்கள் உள்பட 250க்கும் அதிகமான வர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தை இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடத்த முடிவு செய்துள்ளனராம். இதை தொடர்ந்து மும்பையில் 23ஆம் தேதி அசின் - ராகுல் சர்மா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மும்பை திரையுலகப் பிரமுகர்கள், நண்பர்கள் பங்கேற்கிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!