SG50 காலப்பெட்டகம்

எஸ்ஜி50 அங்கீகார விருந்து உப சரிப்பு நிகழ்ச்சியில் நேற்றுப் பேசிய பிரதமர் லீ சியன் லூங், "சென்ற ஆண்டில் மழையில் நனைந்து கொண்டு அமரர் லீ குவான் இயூவுக்கு இறுதி பிரியாவிடை செலுத்தியது, பொன்விழா ஆண்டுக்காக நாம் அனைவரும் சேர்ந்து பாடியது, தென்கிழக்கு ஆசிய, ஆசியான் பாரா விளையாட் டுகளில் தேசிய கீத இசை பாதியில் நின்றபோது நாம் அனை வரும் பாடியது, பல நிகழ்ச்சி களின் வாயிலாக நமது சமய, இன ஒற்றுமையைக் கொண் டாடியது என நம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு நினைவு அலைகளை தந்துள்ளன," என்றார்.

ஆகையால் எஸ்ஜி50ஆம் ஆண்டை வெற்றிகரமாக ஆக்கிய தற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இதில் பங்கேற்ற அனைத்து குழுக்களுக்கும் என் நன்றி உரித் தாகும் என்றும் பிரதமர் குறிப் பிட்டார். "எஸ்ஜி50 நிறைவையொட்டி எஸ்ஜி50 காலப்பெட்டகத்தை நாம் மூடுகிறோம். இதில் சிங்கப்பூரர்கள் தங்கள் அடையாளத்தையும் ஒரு நாடாக கடந்துவந்த பாதையையும் பிரதி பலிக்கும் வகையில் ஐம்பது பொருட்களைத் தேர்வு செய்து வைத்துள்ளனர். "ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இதை நாம் திறந்து பார்ப்போம்.

அப்போது நான் அதைக் காண இருக்க மாட்டேன். ஆனால் உங்களில் சிலர் இருப்பீர்கள். அப்படி திறக்கும்போது இந்த பொன்விழா ஆண்டின் நினைவு அலைகளை மட்டுமே கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். "ஆனால் அதுவே கடந்து வந்த ஐம்பது ஆண்டுகளை உங்களை பின்னோக்கி பார்க்கச் செய்து நாம் அனைவரும் சிங்கப் பூரை முன்னெடுத்துச் சென்றுள் ளோம் என்பதைக் கூற வைக்கும்," என்று பிரதமர் லீ சொன்னார். இதே நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சரும் எஸ்ஜி50 செயற் குழு தலைவருமான ஹெங் சுவீ கியட், "இந்த எஸ்ஜி50 உணர்வு தொடர வேண்டும். அடித்தள மக்கள் பங்கேற்கக்கூடிய முயற்சி களுக்கு வரவு செலவுத் திட்டத் தில் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்படும்," என்றார்.

'எஸ்ஜி50' எழுத்து பதிக்கப்பட்ட பொன்விழா நடை குறியீட்டின் மாதிரியை காலப்பெட்டகத்தில் வைத்து மூடினார் பிரதமர் லீ சியன் லூங். உடன் அமைச்சர்கள் லாரன்ஸ் வோங், ஹெங் சுவீ கியட், கிரேஸ் ஃபூ. படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!