இரு ஏவுகணைகளை சோதித்தது வடகொரியா

வா‌ஷிங்டன்: அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுவாயுதத்தை ஏந்திச்செல் லும் ஆற்றல் கொண்ட இரு ஏவுகணைகளை வடகொரியா நேற்று சோதனை செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்விரு ஏவுகணைகளும் கிழக்கு கடலோரப் பகுதி யிலிருந்து செலுத்தப்பட்டதாக வும் அந்த ஏவுகணைகள் கடலில் விழுவதற்கு முன்பு சுமார் 800 கி.மீட்டர் வரை சென்றதாகவும் அமெரிக்காவும் தென்கொரியா வும் தெரிவித்துள்ளன. வடகொரியா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்த ஒரு சில நாட்களில் அந்நாடு மீண்டும் இத்தகைய ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அணுவாயுதத்தை ஏந்திச்செல்லும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்யுமாறு வட கொரிய அதிகாரிகளுக்கு உத்தர விட்ட சில நாட்களில் இந்த சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின் அந்தச் செயலால் இந்த வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் பதற்றத்தைத் தணிக்க அந்நாடு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அணுவாயுத மற்றும் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!