சிம்புவை ஆச்சரியப்படுத்திய அடா ஷர்மாவின் ஆட்டம்

­­­பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் சிம்பு- நயன்­தாரா இணைந்து நடித்­துள்ள படம் 'இது நம்ம ஆளு'. இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்­பும் இறு­திக்­கட்ட பணி­களும் முடிந்­து­விட்ட நிலையில், ஒரேயொரு பாடல் மட்டும் பட­மாக்­கப்­ப­டா­மல் இருந்து வந்தது. டி.ஆர். பாடிய 'மாமன் வெயிட்­டிங்' என்ற அந்தப் பாட­லுக்­குச் சிம்­பு­வும் நயன் ­தா­ரா­வும் ஆடு­வ­தாக இருந்தது. ஆனால் நயன்­தாரா இந்தப் பாட­லுக்கு நட­ன­மாட எதிர்ப்­புத் தெரி­விக்­கவே, ஆண்ட்ரியாவை வைத்து படமாக்க முயற்சி செய்தனர். ஆனால், அதுவும் கைகூடி வராததால், தெலுங்கு நடிகை அடா ஷர்மாவை வைத்து இப்­பா­டலை எடுக்­கப் படக்­கு­ழு­வி­னர் முடிவு செய்­த­னர். அதன்­படி, கடந்த சில நாட்­க­ளாக சென்னை எம்.ஜி.ஆர். பிலிம் சிட்­டி­யில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டு வந்தது. சிம்­பு­வுக்கே உரித்­தான குத்துப் பாடல் என்­ப­தால் இந்தப் பாடலில் மிகவும் வித்­தி­யா­ச­மான முறையில் நடனம் அமைத்­துள்­ளா­ராம் நடன இயக்குநர் சதீஷ்.

குறிப்­பாக, இப்­பா­ட­லில் சிம்பு தொடர்ச்­சி­யாக 70 வினா­டி­கள் ஒரே காலில் நடனம் ஆடி­யுள்­ளா­ராம். வெறி­யு­டன் சிம்பு ஆடிய இந்த நட­னத்தைப் பார்த்த அனை­வ­ரும் ஆச்­சரி­யத்­தில் உறைந்து போனார்­க­ளாம். ஆனால், தனது ஆட்டத்திற்கு ஈடு கொடுத்து ஆடிய அடா ஷர்மாவைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனாராம் சிம்பு. இப்­பா­டல் பதிவு முடி­வடைந்­து­விட்­ட நிலையில், பாடல் மிகவும் சிறப்­பாக வந்­துள்­ள­தாக படக்­கு­ழு­வி­னர் அனை­வ­ரும் நம்­பிக்கை தெரி­விக்­கின்ற­னர். இப்­ப­டத்­தின் மூலம் சிம்­பு­வின் தம்பி குற­ள­ர­சன் இசை­யமைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கி­யி­ருக்­கிறார் என்பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த சில ஆண்டுகளாகவே 'வாலு' படத்தைத் தவிர, சிம்புவிற்கு வேறு படங்கள் வெளியாகாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானதுதான். இவை யூடியூபில் மிகப் பெரும் சாதனை படைத்தது. தற்போது வரை 75 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்தப் பாடலைப் பார்த்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது 'சிங்கிள் ட்ராக்' விரைவில் வெளிவர இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!