ராணாவோடு நெருங்கிப் பழகும் டாப்சி

திரிஷாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு வேறு நடிகை களுடன் இணைத்துக் கிசுகிசுக்கப் பட்டு வருகிறார் ராணா. 'நான் தனி ஆளாக இருக்கிறேன். நடிப்பில்தான் என் கவனம்' என்று கூறும் ராணா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் 'காஸி' படத்தில் நடித்து வருகிறார் ராணா. இதில் ராணாவின் ஜோடி யாகவும் நாயகியாகவும் டாப்சி நடிக்கிறார். இப்படம் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பை மலரச் செய்திருக்கிறது.

ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது முதல் நீண்ட நேரம் ஒன்றாக பேசி பொழுதைக் கழிக்கிறார்கள் எனப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதுபற்றி டாப்சி கூறும்போது, "நாங்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் நட்பாக இருப்பதை விரும்புகிறோம். "அதேசமயம் உணவு விஷயத் தில் ராணாவுக்கும் எனக்கும் பொதுவான ஒற்றுமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். "என்ன சாப்பிடுவது என்பதைக் கூடச் சில சமயம் இருவரும் ஒன்றாக அமர்ந்து முடிவு செய்து மெனு ஆர்டர் செய்கிறோம். "நமக்குப் பிடித்த உணவு மற்றவருக்குப் பிடிப்பதும் அவருடன் சேர்ந்து அந்த உணவை உண்ணுவதும் மகிழ்ச்சியான ஒன்றாகும்," என ராணாவுடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பதைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!