தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் நேருக்கு நேர் மல்லுக்கட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆளும் அதிமுக 200க்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற நிலையில் திமுகவும் 180க்கும் அதிகமான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கி கடந்த முறை தோற்றதே போதும் என்று எண்ணியுள்ள திமுக, உதிரிக் கட்சிகளை நிறுத்துவதால்தான் அதிமுக எளிதில் வெற்றி பெறுவதாகவும் கருதுகிறது.
ஆகையால், தேமுதிகவும் தன்பக்கம் வராத நிலையில் இம்முறை 170க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுகவை நேரடியாக எதிர்த்து நின்று தன் பலத்தைச் சோதிக்க திமுக ஆயத்தமாகி வருகிறது.