மேலும் 1,200 மருந்துகளுக்கு தடை விதிக்க பரிசீலனை

நிர்­­­ண­­­யிக்­­­கப்­­­பட்ட அளவைவிட வேதிப் பொருட்­­­களின் அளவு அதி­­­க­­­மாக இருப்­­­ப­­­தாக;f கூறி இந்­­­தி­­­யா­­­வில் சென்ற வாரம் 350க்கு மேற்­­­பட்ட மருந்து, மாத்­­­திரை­­­களுக்குத் தடை விதித்து அதி­­­ரடி உத்­­­த­­­ரவு பிறப்­­­பிக்கப்பட்டது. அந்தத் தடை இந்­­­தியா முழு­­­வ­­­தும் உள்ள அனைத்து மருந்­­­துக்­­­கடை­­­களும் கடைப்­­­பி­­­டிக்­­­கின்ற­­­னவா என்­­­பதை உறு­­­திப் ­படுத்­­­து­­­வ­­­தற்கு முன்னர் மேலும் 1,200 மருந்து, மாத்­­­திரை­­­களைத் தடை செய்­­­வது பற்றி இந்­­­திய சுகா­­­தா­­­ரத் துறை பரி­­­சீ­­­லித்து வரு­­­கிறது. மூளைக்­­­குப் பாதிப்பு ஏற்­­­படுத்­­­தக்­­­கூ­­­டிய சில வகை மயக்க மருந்­­­து­­­களும் அவற்­­­றில் அடங்­­­கும். கலப்பு மருந்­­­து­­­களில் இது­­ வரை­­­யி­­­லும் சுமார் 6,600 மருந்­­­து­­­கள் ஆய்­­­வுக்கு உட்­­­படுத்­­­தப்­­­பட்­­­டன. அவற்­­­றில் நிர்­­­ண­­­யிக்­­­கப்­­­பட்ட விகி­­­தப்­­­படி கலக்கப்படாத மருந்­­­து­­­கள் அடை­­­யா­­­ளம் காணப்­­­பட்டு 'பி' என தரம் பிரிக்­­­கப்­­­பட்டன.

அவ்­­­வாறு அடை­­­யா­­­ளம் காணப்­­­பட்ட 1,200 'பி' தர வரிசை மருந்­­­து­­­கள் விரை­­­வில் தடை செய்­­­யப்­­­ ப­­­ட­­­லாம் என இந்­­­தி­­­யா­­­வின் மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் தெரி­­­வித்­­­துள்­­­ளது. சிகிச்சைக்கு ஏற்­­­புடை­­­ய­­­தாக இல்­­­லா­­­மல், எந்த­­­விதப் பய­­­னும் இல்­­­லாத, நிர்­­­ண­­­யம் செய்­­­யப்­­­பட்ட அளவை ஒத்­­­துப்­­­போ­­­காத, ஒன்­­­றுக்­­­கும் மேற்­­­பட்ட மூலக்­­­கூ­­­று­­­கள் சேர்ந்த கூட்டு மருந்­­­து­­­களுக்­­­குத் தடை விதிக்­­­கப்­­­படு­­­வ­­­தாக இந்­­­திய சுகா­­­தா­­­ரத் துறை அறி­­­வித்­­­துள்­­­ளது. வலி நிவா­­­ரணி, சளி, இரு­­­ம­­­லுக்­­­கான மருந்­­­து­­­கள், நோய் எதிர்ப்­­­புக்­­­கான மருந்­­­து­­­கள், குறிப்­­­பிட்ட சர்க்­­­கரை நோய் மருந்­­­து­­­கள் உள்­­­ளிட்­­­ட­­­வற்­­­றுக்­­­குத் தடை விதிக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது. இந்தத் தடை உட­­­ன­­­டி­­­யாக அம­­­லுக்கு வந்­­­துள்­­­ள­­­தால் அவற்றைக் கையாள்­­­வ­­­தில் மருந்து விற்­­­பனை­­­யா­­­ளர்­­­களுக்­­­குப் பல்­­­வேறு சிக்­­­கல்­­­கள் எழுந்­­­துள்­­­ளன. "ஒவ்­­­வொரு மருந்து விற்­­­பனைக் கடை­­­யி­­­லும் 400, 500 வணி­­­கப் பெயர்­­­களில் சுமார் 4 ஆயி­­­ரம் முதல் 5 ஆயி­­­ரம் மருந்­­­து­­­கள் விற்­­­பனைக்கு வைக்­­­கப்­­­பட்­­­டி­­­ருக்­­­கும். அவை அனைத்தை­­­யும் ஆராய்ந்து நீக்­­­கு­­­வது மிக­­­வும் சிர­­­ம­­­மான பணி­­­யா­­­கும். தமி­­­ழ­­­கத்­­­தில் சுமார் 40 ஆயி­­­ரம் மருந்­­­துக் கடை­­­கள் உள்­­­ளன.

"இவை அனைத்­­­தி­­­லும் உள்ள மருந்­­­து­­­களின் மூலக்­­­கூறு கலவை­­­களை ஆராய்ந்து நீக்­­­கும்­­­போது, பொது­­­மக்­­­களுக்கு மருந்­­­து­­­கள் வழங்­­­கு­­­வ­­­தில் சிக்கல் ஏற்­­­படும். இதனால் இந்தத் தடையை அமல்­­­படுத்­­­து­­­வ­­­தற்கு 6 மாதம் கால அவ­­­கா­­­சம் கேட்டு மத்­­­திய சுகா­­­தா­­­ரத் துறைக்­­­குக் கோரிக்கை விடுக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது," என்று தமிழ்­­­நாடு மருந்து வணி­­­கர்­­­கள் சங்கத்­­­தின் நிர்­­­வா­­­கச் செய­­­லா­­­ளர் என்.ஆனந்தன் தெரி­­­வித்­­­தார். இந்­­­நிலை­­­யில் ஏற்­­­கெ­­­னவே 350 மருந்­­­து­­­களுக்­­­குத் தடை விதிக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ள­­­தால் ரூ.2,700 கோடிக்கு மேல் இழப்பு ஏற்­­­பட்­­­டுள்ள நிலை­­­யில், இப்­­­போது மேலும் 1,200 மருந்­­­து­­­கள் தடை செய்­­­யப்­­­பட்­­­டால் ரூ.7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்­­­ப­­­டக்­­­கூடும் என அஞ்சப்­­­படு­­­கிறது.

இந்­­­நிலை­­­யில் ஏற்­­­கெ­­­னவே 350 மருந்­­­து­­­களுக்­­­குத் தடை விதிக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ள­­­தால் ரூ.2,700 கோடிக்கு மேல் இழப்பு ஏற்­­­பட்­­­டுள்ள நிலை­­­யில், இப்­­­போது மேலும் 1,200 மருந்­­­து­­­கள் தடை செய்­­­யப்­­­பட்­­­டால் ரூ.7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்­­­ப­­­டக்­­­கூடும் என அஞ்சப்­­­படு­­­கிறது.

பெங்களூரில் உள்ள ஒரு மருந்துக்கடை. கோப்புப்படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!